உலகம்

அமெரிக்கா பல்பொருள் அங்காடியில் இந்திய பெண் சுட்டுக்கொலை; கொள்ளையை தடுத்தபோது விபரீதம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளி பெண்ணெ சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொள்ளையை தடுத்தபோது விபரீதம்….

தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதியைச் சுற்றி வளைத்து, விசாரணையைத் தொடங்கினர்.

கொல்லப்பட்ட பெண் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மேக்னாபென் படேல் என அடையாளம் காணப்பட்டார்.

இவர் கடந்த பத்து வருடமாக அந்த பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்துள்ளார். பல்பொருள் அங்காடியில் கொள்ளை முற்சியை தடுக்கும் போது இந்திய பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button