கோட்டாபய ஆட்சியில் நடந்த அண்டிஜன் மோசடி: சிக்கப்போகும் பெரும் புள்ளி…

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கொவிட் 19 தொற்றின் போது ரெபிட் அண்டிஜன் பரிசோதனை கருவிகள் இறக்குமதியில் நடந்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளது.
குறித்த மோசடி தொடர்பில் கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களின் பெயர்கள் கூட குறிப்பிடப்பட்ட நிலையில் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.சமீபத்தில் நாடாளுமன்றத்திலும் இவ்விடயம் பேசப்பட்டது.
விசாரணைகள் தொடர்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்
பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றின் ஊடாக ரெபிட் அண்டிஜன் (rapid antigen test) பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்ததில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பிலே விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
‘மகேன் ரட்டட’ அமைப்பின் சஞ்சய மஹவத்த என்பவரால் 2024.12.19 ஆம் திகதி செய்த முறைப்பாட்டுக்கு ஏற்பவே விசாரணைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன.
சஞ்சய மஹவத்தவுக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனக்கு அனுப்பியுள்ள கடிதத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதவிட்டே இதனை குறிப்பிட்டுள்ளார்.
3.1 பில்லியன் ரூபாய் பெறுமதியான அண்டிஜன் கருவிகளை இறக்குமதி செய்ததில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முறைப்பாடு செய்ததற்காக நீங்கள் ஏதும் அசௌகரியங்களுக்கு அல்லது இன்னல்களுக்கு உள்ளானால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அவசர தொலைபேசிக்கு அறியத்ததருமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()