இலங்கை

மாகாண சபைகளுக்கு இந்த வருடத்தில் தேர்தல்

மாகாண சபைகள் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்தும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது என்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சரிடம் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளதாவது,

மாகாண சபைகள் தேர்தலை நாங்கள் தாமதப்படுத்தவில்லை. டித்வா போன்றவற்றதால் அதனை நடத்துவதில் சிக்கல் இருந்தது. ஆனால் இந்த வருடத்திற்குள் தேர்தல் நடத்தப்படும். எனினும் எந்த காலப்பகுதியில் தேர்தல் நடக்கும் என்பதனை கூற முடியும். எவ்வாறாயினும் இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தேர்தல் தாமதமாவதாக யார் கூறுகிறார்கள்? நாம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும், இவ்வருடத்திற்குள்ளேயே தேர்தல் நடத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே பொதுமக்கள் இது குறித்து கவலைப்படத் தேவையில்லை.”

தேர்தல் நடத்தப்படும் மாதத்தையோ அல்லது திகதியையோ தம்மால் தற்போது துல்லியமாகக் கூற முடியாது

காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாவிட்டாலும், 2026 ஆம் ஆண்டிற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியான நிலையில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button