உலகம்

ஹார்முஸ் நீரிணைக்கு புதிய கட்டுப்பாட்டு திட்டம் ; ஈரான் அதிரடி

ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கடல்சார் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் புதிய வழித்தட மேலாண்மை அமைப்பை ஈரான் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய திட்டம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஈரானின் மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஒழுங்கமைப்பின் கீழ், வணிகக் கப்பல்கள் மற்றும் ஈரானுடன் ஒத்துழைப்புடன் செயல்படும் நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த கட்டமைப்பின் கீழ் வழங்கப்படும் பிரத்யேக கடல்சார் சேவைகளுக்காக சம்பந்தப்பட்ட கப்பல்களிடமிருந்து கட்டணமும் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கிய பங்காற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் இவ்வாறான புதிய கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்துவது, சர்வதேச கடல்சார் வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button