பலதும் பத்தும்
சூரியனில் பட்டாம்பூச்சி வடிவத் துளை – நாசா ஆய்வகம்

வளிமண்டலத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர் நமது விஞ்ஞானிகள். அந்த வகையில், நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளையை புகைப்படம் எடுத்துள்ளது.
சுமார் 5,00,000 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ துளையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் இந்த திறப்பு கொரோனல் துளை என அழைக்கப்படுகிறது.
இந்தத் துளை சூரியனின் காந்தப்புலங்களை திறந்து, சூரியக் காற்று விண்வெளியில் தப்பிச்செல்ல வழிவகுக்கிறது.
அந்தத் துளையிலிருந்து வரும் சூரியக் காற்று நாளை (14) இற்குள் பூமியை அடையும்.
மேலும் இது புவி காந்த புயல்களை ஏற்படுத்தலாம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
![]()