இலங்கை

யாழ்ப்பாணம் கந்தரோடையில் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை

யாழ்ப்பாணம், கந்தரோடையில் விகாரை அமைந்துள்ள பகுதியில் பூஜை வழிபாடுகளை நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில், தற்போது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் அதிகளவான சிங்கள மக்களும் ஒன்றுகூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டு பூஜை வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், சிலை நிறுவப்பட்டமைக்கான அனுமதி, அதற்குப் பின்னணியில் உள்ள ஏற்பாடுகள் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *