உலகம்

ஜெர்மனியை உலுக்கும் Gen Z போராட்டம்!

ஜேர்மனியில் அந்த நாட்டின் 34 நகரங்களில் நடைபெறவுள்ள போராட்டங்களில் 1 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐரோப்பா முழுவதும் பரவி வரும் Gen Z இளைஞர்களின் போராட்ட அலை ஜெர்மனியையும் எட்டியுள்ளது. கல்விக்கான முதலீட்டை அதிகரித்தல், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெர்லின், பிராங்க்பேர்ட், மியூனிக் நகரங்களில் போராட்டங்கள்
‘Gen Z regelt’ (Gen Z பொறுப்பேற்கிறது) என்ற அமைப்பின் தலைமையில் பெர்லின், பிராங்க்பேர்ட், மியூனிக் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. கட்டாய இராணுவ சேவைக்கும் இந்த அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஹலோவீன் கொண்டாட்டங்களுடன் இணைந்து போராட்டங்கள் நடைபெறுவதால், அவை பெரும்பாலும் அமைதியான முறையில் இடம்பெறும் என ஜெர்மன் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

எனினும், தீவிரவாதக் குழுக்கள் இளைஞர் இயக்கத்தைத் தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் தீவிர இடதுசாரி அமைப்புகளின் சில பிரிவுகளும் வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய சில குழுக்களும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என ஜெர்மனியின் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *