கண்களிலிருந்து இரத்தத்தை பீய்ச்சியடிக்கும் ‘கொம்பு பல்லி’

பொதுவாக ஒவ்வொரு உயிரினத்துக்கும் இடையில் பல வித்தியாசமான குணாதிசயங்கள் காணப்படும்.
அந்த வகையில், பாலைவனங்களில் வாழும் கொம்பு பல்லிகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கண்களில் இருந்து இரத்தத்தை பீய்ச்சியடித்து எதிரிகளை ஓடவிடும் திறன் கொண்டது.
பொதுவாக ஏனைய உயிரினங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பல வழிகளை விலங்குகள் கையாள்கின்றன.
அந்த வகையில் இந்த கொம்பு பல்லிகள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், தலையிலிருந்து உடலுக்கு திரும்பும் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிடும். இதனால் கண்களுக்க கீழே உள்ள இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி அது வெடித்து சுமார் மூன்று அடி தூரம் வரையில் இரத்தம் பாயும்.
இந்த பல்லிகள், நரி, ஓநாய், நாய் போன்ற விலங்குகளிடம் மட்டுமே இந்த ட்ரிக்கை பயன்படுத்துகின்றன.
விஷத்தன்மைக் கொண்ட எறும்புவகை ஒன்றை இவை சாப்பிடும் பழக்கம் கொண்டவை.
![]()