பலதும் பத்தும்

ஒரே நாளில் பிரிந்த தம்பதி

கணவன் உயிரிழந்த சில மணிநேரங்களிலேயே, அவரது பிரிவைத் தாங்க முடியாமல் மனைவியும் உயிர்நீத்த சம்பவம் பாண்டிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திங்கட்கிழமை (22) அன்று இடம்பெற்றது.

சுகயீனம் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்ததையடுத்து, அவரது பூதவுடலுக்கு அருகில் அமர்ந்து மிகுந்த மனவேதனையுடன் அழுதுகொண்டிருந்த மனைவியும், சில மணிநேரங்களிலேயே உயிரிழந்துள்ளார்.

பாண்டிருப்பு பிரதான வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய நாகமணி போடி சுந்தரமூர்த்தி மற்றும் 66 வயதுடைய இராஜேஸ்வரி சுந்தரமூர்த்தி ஆகிய தம்பதியரே இவ்வாறு திங்கட்கிழமை (22) இறைபதம் அடைந்தவர்களாவர்.

அவர்களது இரு பூதவுடல்களும் ​ செவ்வாய்க்கிழமை (23) ஒன்றாக ஒரே வீட்டில் வைக்கப்பட்டிருந்ததுடன், மரண அஞ்சலிப் பதாகைகளும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button