பலதும் பத்தும்

சைவநெறி பாடத்தில் ‘A’ சித்தி பெற்று அசத்திய முஸ்லிம் மாணவி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், மஸ்கெலியா புளூம்பீட் தேசிய கல்லூரியைச் சேர்ந்த மாணவி முகமது ரமீஸ் பாத்திமா ரிஃப்னா, அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்து சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். ஹட்டன் கல்வி வலயத்தின், மூன்றாம் கோட்டத்திற்கு உட்பட்ட இப்பாடசாலையின் மாணவியான இவர், தனது கல்வித் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இப்பரீட்சை முடிவுகளின் ஒரு சிறப்பம்சமாக, ஒரு முஸ்லிம் மாணவியான பாத்திமா ரிஃப்னா, இந்து சமயப் பாடமான ‘சைவநெறி’ பாடத்தில் தோற்றி மிகச்சிறந்த ‘A’ சித்தியைப் பெற்று அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். மதங்களைக் கடந்து, பிற சமயப் பாடத்தில் இத்தகையதொரு சாதனையைப் படைத்திருப்பது பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் சைவநெறிப் பாடத்தில் மிகச்சிறந்த சித்தியைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button