பலதும் பத்தும்

அதிர்ஷ்ட கல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா!; உங்க ராசிக்கு எந்த கல்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்  ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கல் (Gemstone) இருக்கும். சரியான ராசி கல்லை அணிவதால்  உடல்நலம் சீராக இருப்பதோடு வாழ்வில் செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது.

நம்மில் பெரும்பானர்களுக்கு ராசிக்கல் அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது ராசிக்கு ஏற்ற கல் எது என்பது குறித்து சரியாக தெரியாததால் இதனை தவிர்த்துவிடுவார்கள்.

இன்னும் சிலர் அழகான இருக்கின்றது என்பதனால் தனது ராசிக்கு பொருந்தாத கல்லை அணிந்து பிரச்சியில் சிக்கிக்கொள்வர்கள்.

இந்த பதிவில் உங்கள் ராசிக்கான ராசிக்கல் எது என்பது குறித்து பார்கலாம். ஆனால் ராசிக்கல்லை அணிவதற்கு முன் ஜோதிடரை அணுகுவது மிகவும் சிறந்த பலனை பெற உதவும்.

அதிர்ஷ்ட கல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா! உங்க ராசிக்கு எந்த கல்ன்னு தெரியுமா? | Which Is Lucky Stone Best For 12 Zodiacs

கிரக நிலைகளில் சாதக மாற்றம் இருக்கும் பட்சத்தில் ராசிக்கு ஏற்ற கல்லை அணிவது அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கும். அந்தவகையில் எந்த ராசிக்க எந்த கல் ராசிகல் என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசியினர் செவ்வாயால் ஆளப்படுகின்றனர்.எனவே இந்த ராசியினர் சிவப்பு பவளம் அணிவதால் வாழ்வில் நிதி பிரச்சினைகள் நீங்குவதுடன், தைரியமும் ஆற்றலும் அதிகரிக்கும்.

ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ராசியினரான இவர்கள்  வைரம் அணிந்தால் காதல்  வாழ்க்கை அமோகமாக இருக்கும் மேலும் நிதி பிரச்சினைகள் நீங்கி வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா! உங்க ராசிக்கு எந்த கல்ன்னு தெரியுமா? | Which Is Lucky Stone Best For 12 Zodiacs

மிதுனம்

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த மிதுன ராசியினர்  மரகதம் அல்லது அகாட் அணிவதால் இவர்களின் சிந்தனை தெளிவடையும். அதனால் தைரியமாக முடிவெடுக்கும் குணம் மேலோங்குகும்.

கடகம்

சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியினர்  சந்திர கல் அல்லது முத்து அணிவதால் அதிர்ஷ்டம் தேடி வரும். இந்த கல்லை அணிந்தால் தொட்டடிதல்லாம் வெற்றியாகும்.

அதிர்ஷ்ட கல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா! உங்க ராசிக்கு எந்த கல்ன்னு தெரியுமா? | Which Is Lucky Stone Best For 12 Zodiacs

சிம்மம்

சிம்ம ராசியினர் மாணிக்கங்கள் அல்லது மாதுளைகளை அணிவதால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசியினரின் அதிபதியாக சபையர் அல்லது பெரிடோட் அணிவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.இவர்களின் நிதி சிக்கல்கள் இந்த கல்லை அணிவதால் காணாமல் போய்விடும்.

துலாம்

துலா ராசியினரும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இந்த ராசிக்காரர்கள் வைர நகைகளை அணியவதால்  தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதக பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசியினர் கார்னெட் அல்லது நீலமணியை அணிவது நன்மை பயக்கும். இவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு

தனுசு ராசியை வியாழ பகவான் ஆள்வதால் இந்த ராசியினர் ரத்தினங்களை அணிய வேண்டும். இந்த ராசிக்கு டர்க்கைஸ் அல்லது மஞ்சள் நீலக்கல் அணிவது நன்மை பயக்கும். அதனால் அதிர்ஷ்டம் கொடுக்கும்.

 

 

அதிர்ஷ்ட கல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா! உங்க ராசிக்கு எந்த கல்ன்னு தெரியுமா? | Which Is Lucky Stone Best For 12 Zodiacs

மகரம்

சனிபகவான் ஆச்சியில் பிறந்த மகர ராசியினர்  மோசமான விளைவுகளை குறைக்க  செவ்வந்தி அல்லது நீல சபையர் அணிவது நன்மை பயக்கும். அதனால் நிதி நிலைமையும் மேம்படும்.

கும்பம்

சனியின் ஆதிக்கத்தில் பிறந்த கும்ப ராசியினர் கார்னெட் அணிவது பல்வேறு வழிகளிலும் சாதக பலன்களை கொடுக்கும். இவர்களின் பொருளாதாரம் மேம்பட இந்த கல் அணிவது சிறப்பு.

மீனம்

மீன ராசியினர் அக்குவாமரைன் அல்லது சந்திர கல் அணிவதால் நன்மைகள் கிடைக்கும்.  இது ஆன்மிகம், படைப்பாற்றல் மற்றும் உள்ளுணர்வை மேம்படுத்த உதவும். இது இவர்களின் வாழ்வில் செல்வ செழிப்பை அதிகரிக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button