பலதும் பத்தும்

தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!

தேர்தல் குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்குச் செயற்கை நுண்ணறிவு (AI) (ch ) சாட்போட்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவை வாக்காளர்களுக்குத் தவறான தகவல்களை வழங்கக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.

வேல்ஸ் நாடாளுமன்றத் (Senedd) தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு சாட்போட்கள் வாக்காளர்களுக்குத் தவறான மற்றும் குழப்பமான தகவல்களை வழங்குவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து மறைமுக வாக்காளர்கள் (Undercover voters) மிகவும் பிரபலமான சில AI சாட்போட்களிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த பல சாட்போட்கள் துல்லியமற்ற மற்றும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளன.

இந்நிலையில் AI பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2024 பொதுத்தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் சுமார் 13% பிரித்தானிய வாக்காளர்கள் அரசியல் தகவல்களைப் பெறுவதற்கு இத்தகைய உரையாடல் சார்ந்த AI கருவிகளைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button