பலதும் பத்தும்

ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு ; அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்

அமெரிக்காவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான Spirit Airlines தனது அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

2026 மே 2ஆம் திகதி முதல் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர் சேவையும் முழுமையாக நிறுத்தப்படுவதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி 34 ஆண்டுகளாக துறையில் பங்களித்ததில் பெருமை கொள்கிறோம்.

எங்களின் பயணிகளுக்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்பினோம்” என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேற்காசியப் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலையுயர்வு மற்றும் கடுமையான நிதி நெருக்கடி இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும், மாற்று விமான சேவைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முடிவால் சுமார் 17,000 பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதில் 14,000 நிறுவன பணியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களும் அடங்குவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இருமுறை திவாலாக அறிவிக்கப்பட்ட இந்த நிறுவனம், மீட்பு முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.

குறிப்பாக டிரம்ப் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடந்தபோதும், கடன் வழங்குவோர் மற்றும் விமானத் துறை தரப்பில் எதிர்ப்பு எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு அமெரிக்க விமானப் போக்குவரத்து துறையிலும் பயணிகளிடையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button