அரசியல்வாதிக்கு விமானத்தை பரிசளித்த தொழில் அதிபர்!

ஆஸ்திரேலியாவின் பெரும் கோடீஸ்வரரான Gina Rinehart, அந்நாட்டின் One Nation கட்சித் தலைவரான பாலின் ஹான்சனுக்கு சுமார் ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான நவீன ரக விமானத்தைப் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த விமானத்துடன் Senator Hanson னின் நெருங்கிய நண்பர்களிடமிருந்து அக்கட்சிக்கு கூடுதல் நிதியுதவியும் கிடைத்துள்ளது,
இது அக்கட்சி தனது தேர்தல் பிரச்சாரங்களை நாடு முழுவதும் தீவிரப்படுத்த உதவும். இருப்பினும், இந்த பெரும் நன்கொடை அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளதுடன், பாலின் ஹான்சன் தொழிலாளர்களின் நலன்களை விட செல்வந்தர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஹான்சன் தனது முந்தைய பயணங்களை முறையாக வெளிப்படுத்தாதது தொடர்பான சர்ச்சைகளுக்குப் பிறகு, இந்த புதிய சொத்து அறிவிப்பு அவரது நிதிப் பதிவேட்டில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஆதரவை ஒரு தேசபக்திச் செயலாக ஹான்சன் கொண்டாடும் வேளையில், இது ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தை அரசியலில் பிரதிபலிப்பதாக ஆளும் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
![]()