கவிதைகள்

அறத்தினை மீறாமலிருத்தல் இனிது!….  கவிதை … அன்பு ஜெயா

பா வகை: தாலாட்டுச் சிந்து பாட்டு.

ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ!
அறம்தன்னை மீறாதே – மனத்திலிதைத்
திறமாக ஏற்றிடுவாய்!

சினமெவர்க்கும் சீற்றமதை – அளித்திடுமே
மனத்திலதை ஏற்றிடுவாய்!
உனக்குதவி வேண்டுமெனின் – சினமில்லா
மனத்துடன் வேண்டிடுவாய்!
வறுமையின் துன்பத்தை – எளிமையினால்
பொறுமையுடன் வென்றிடுவாய்!
அளித்திட்ட இடம்தன்னில் – அமைதிபெறல்
எளிமையின் சிறப்பன்றோ!
பெரும்விருப்பம் இன்பமதை – அழித்திடுமே
பெருமையையும் குலைத்திடுமே!
பெரும்விருப்பம் போக்கிவிடு – வாழ்வில்
பெரும்இன்பம் சேர்ந்திடுமே!

ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ!
அறம்தன்னை மீறாதே – மனத்திலிதைத்
திறமாக ஏற்றிடுவாய்!
———————————–

அன்பு ஜெயா, சிட்னி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *