பலதும் பத்தும்

உடல் எடையைக் குறைக்க நினைக்கறீர்களா? காலையில் இந்த ஆம்லேட் சாப்பிடுங்க

உடல் எடையைக் குறைக்க உதவும் பனீர் முட்டை ஆம்லேட் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

புரதச்சத்து அதிகம் கொண்ட பனீரை தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனை முட்டையில் ஆம்லேட்டாக செய்து யாரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.

முட்டையுடன் பனீர் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க ஒரு முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஆம் டயட்டில் இருப்பவர்களுக்கு பனீர் முட்டை ஆம்லேட் நல்ல தெரிவாகும்.

காலையில் உட்கொள்ளும் உணவுகள் அதிக ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில் புரோட்டீன் சத்து நிறைந்த பனீர் முட்டை ஆம்லேட் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பனீர் – 100 கிராம்
முட்டை – 3
துருவிய கேரட் – 1
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
மிளகுதூள் – அரை ஸ்பூன்
சமையல் எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் மிக்ஸி ஜாரில் பனீர் துண்டுகளை சேர்த்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். முட்டைகளை எடுத்து பவுல் ஒன்றில் உடைத்து ஊற்றவும்.

அரைத்து வைத்த பனீர் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்பு அதனுடன் கேரட், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இவற்றினை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிடவும்.

ஏற்கனவே வைத்திருக்கும் முட்டை கலவையில், வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். பின்பு அடுப்பில் தோசைகல்லை வைத்து சூடானதும், அதில் எண்ணெய் சேர்த்து, ஆம்லேட் கலவையை கல்லில் ஊற்றி சுட்டு எடுத்தால் போதும்.

புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த பனீர் முட்டை ஆம்லேட் தயார். காலை உணவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *