இலங்கை

நாமல் இலங்கையின் நெல்சன் மண்டேலா!; மொட்டு செயலாளர் சாகர கூறுகிறார்

நாமல் ராஜபக்‌ஷவை சிறையில் அடைத்து அவரை இலங்கையின் நெல்சன் மண்டேலாவாக ஜனாதிபதி அநுரகுமார உருவாக்கிக்கொண்டிருக்கின்றார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே சாகர காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாமல் ராஜபக்‌ஷ பிணை இன்றி இப்போதும் சிறையில் இருக்கின்றார். எயார்பஸ் கொடுக்கல் வாங்கள் தொடர்பில் அவுஸ்திரெலியாவில் இருக்கும் நபரொருவர் வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்து விளக்க மறியலில் வைத்துள்ளனர். இந்நிலையில் சட்டவாட்சி தொடர்பில் நாட்டு மக்களுக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஆனால் நாமல் ராஜபக்‌ஷவை சிறையில் வைத்து தனது பயணத்தை தொடர முடியுமென்று அநுரகுமார திஸாநாயக்க நினைப்பாராக இருந்தாலும் அது அவரின் தவறாகும். அதாவது அநுரகுமாரவினால் இலங்கையில் நெல்சன் மண்டேலா போன்ற ஒருவரை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவே எங்களுக்கு தெரிகின்றது. இதனால் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தவறு ஏற்பட்டுள்ளது என்றே எங்களால் கூற முடியும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *