உலகின் செல்வந்த இளைஞர் – 31 வயதில் அனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு

அனந்த் அம்பானி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரின் மகன் ஆவார். தற்போது இவருக்கு 31 வயதாகும் நிலையில் சொத்து மதிப்பு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன், நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானியின் 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்த நாளை முன்னிட்டு யானைக்கு பழ விருந்து புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரி கோவிலில் பெரும் பூசை இப்படி பல விடயங்கள் மூலம் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் அனந்த் அம்பானி தன்னுடைய பிறந்தநாளை பழங்குடியின மக்களுடன் இணைந்து கொண்டாடி உள்ளார். இந்த நிகழ்வின் போது பழங்குடியின மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் 31 வயதில் அனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானும், முகேஷ் அம்பானியின் இளைய மகனுமான ஆனந்த் அம்பானி தற்போது 31 வயதை எட்டியுள்ளார்.
தற்போது அனந்த் அம்பானி அம்பானி தலைமுறையின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், உலகின் மிகப் பெரிய செல்வந்த இளைஞர்களில் ஒருவராகவும் உள்ளார்.
இவருடைய சொத்து மதிப்பு இவருடைய தந்தை அளவில் பெரிதானதாக இல்லாவிட்டாலும் தற்போது இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் £29 பில்லியன் (INR 3.59 லட்சம் கோடி) ஆகும்.
![]()