பலதும் பத்தும்

ஏவுகணை சோதனைகளால் உலகில் அச்சத்தை அதிகரிக்கும் வடகொரியா

தென் கொரியாவுடன் சுமூக உறவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட சூழலில் அதை முற்றிலுமாக நிராகரிக்கும் வகையில் வடகொரியா புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான வான்சன் பகுதியிலிருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, குறுகிய தூரம் பாயும் பல ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் ஒரு தேவையற்ற தூண்டுதல் நடவடிக்கை என்று தென் கொரியாவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என ஜப்பானும் கண்டித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *