பலதும் பத்தும்

காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கிறீர்களா? ஒரு 10 நிமிஷம் ஒதுக்கினால் போதும்

காலை நேரத்தில் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் நிலையில், வெறும் 10 நிமிடத்தில் எந்தெந்த உணவுகளை தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

காலை உணவு

காலை உணவு என்பது ஒவ்வொரு நபருக்கும் மிக மிக முக்கியம் ஆகும். நாள்முழுவதும் தனது வேலையை சுறுசுறுப்பாக செய்வதற்கு காலை உணவே உதவியாக இருக்கின்றது.

ஆனால் இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் பலரும் காலை உணவிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆம் காலை உணவை தவிர்த்து வேலை செல்கின்றனர்.

காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கிறீர்களா? ஒரு 10 நிமிஷம் ஒதுக்கினால் போதும் | Do Not Avoid Morning Breakfast Healthy Issue

மிக முக்கியமாக காலை உணவில் புரதம் நிறைந்த உணவு கட்டாயம் இருக்க வேண்டும். இவை உடலுக்கு சக்தியளித்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துகின்றது.

பிஸியான நேரத்தில் மிகவும் எளிதாக செய்யக்கூடிய புரதச்சத்து நிறைந்த உணவுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

புரதச்சத்து நிறைந்த காலை உணவுகள்

புரதச்சத்து நிறைந்த கடலை மாவில் அடை செய்து சாப்பிடலாம். அதாவது கடலை மாவில் வெங்காயம், தக்காளி, கீரை இவற்றினை சேர்த்து அடையாக செய்யலாம்.

பாசிப்பருப்பினை ஊற வைத்து அரைத்து அதில் அடை செய்து சாப்பிட்டால் புரதம் நிறைந்த காலை உணவு தயார். இதனுடன் பனீர் சேர்த்துக்கொள்ளலாம்.

காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கிறீர்களா? ஒரு 10 நிமிஷம் ஒதுக்கினால் போதும் | Do Not Avoid Morning Breakfast Healthy Issue

உலர் பழங்கள், கிரேக் தயிர், விதைகள் இவற்றினை சேர்த்து சாப்பிடுவது சத்தான உணவாக இருப்பதுடன், விரைவில் செரிமானம் ஆகுமாம்.

புரதம் நிறைந்த பன்னீரில் புர்ஜி மற்றும் கோதுமை டோஸ்டுடன் சாப்பிட்டால் காலை முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கிறீர்களா? ஒரு 10 நிமிஷம் ஒதுக்கினால் போதும் | Do Not Avoid Morning Breakfast Healthy Issue

ஓட்ஸ், பால், பீனட் பட்டர் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்து பானமாக பருகினால் சத்தான காலை உணவு தயார்.

இதே போன்று முளைகட்டிய பருப்பு, நறுக்கிய காய்கறி, எலுமிச்சை சாறு சேர்த்து செய்யும் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக சத்துள்ளதாகும். இவை நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும்.

காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கிறீர்களா? ஒரு 10 நிமிஷம் ஒதுக்கினால் போதும் | Do Not Avoid Morning Breakfast Healthy Issue

கோதுமை டோஸ்டில் பீனட் பட்டர் தடவி சியா அல்லது ஆளி விதைகள் சேர்த்து சாப்பிட்டால் சத்தான காலை உணவு தயார்.

காலை வேலையில் இவ்வாறான புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், அதிக சக்தியுடனும் இருக்கலாம்.

காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கிறீர்களா? ஒரு 10 நிமிஷம் ஒதுக்கினால் போதும் | Do Not Avoid Morning Breakfast Healthy Issue

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *