பலதும் பத்தும்
ஆன்மீக பாதையில் நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (08) காலை சிவனொளிபாதமலைக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஹட்டன், மஸ்கெலியா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமன் தேவ ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட நமல் ராஜபக்ஷ, அதனைத் தொடர்ந்து மலுவ பகுதியில் நடைபெற்ற காலைப் பூஜையிலும் கலந்துகொண்டு ஆசிகளைப் பெற்றார்.
இந்தப் பயணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் இந்திகா அனுருத்த உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் நமல் ராஜபக்ஷவுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

![]()