பலதும் பத்தும்

இதய ஆரோக்கியம் முதல் கண்பார்வை வரை.. அற்புதம் செய்யும் பசலை கீரை! இப்படி சாப்பிடுங்க

பொதுவாகவே அன்றாட உணவில் கீரை வகைகளை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அனைத்து வகை கீரைகளிலுமே ஏராளமான ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களிலும் செரிந்து காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக பசலைக்கீரையில், இரும்புச்சத்து, வைட்டமின்கள் (A, C, K) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் காணப்படுகின்றது.

பசலைக்கீரை இரத்த சோகையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எலும்புகளை வலுவாக்குவதில் ஆற்றல் காட்டுகின்றது.

இதய ஆரோக்கியம் முதல் கண்பார்வை வரை.. அற்புதம் செய்யும் பசலை கீரை! இப்படி சாப்பிடுங்க | Pasalai Keera Thokku Health Benefits In Tamil

மேலும், இதில் காணப்படும் நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குட்டுக்குள் வைப்பதுடன், கண் பார்வையை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிலையந்த பசலை கீரையை கொண்டு எவ்வாறு கீரை தொக்கு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இதய ஆரோக்கியம் முதல் கண்பார்வை வரை.. அற்புதம் செய்யும் பசலை கீரை! இப்படி சாப்பிடுங்க | Pasalai Keera Thokku Health Benefits In Tamil

தேவையான பொருட்கள்

பசலை கீரை – ஒரு கட்டு

பெரிய வெங்காயம்- 1

சின்ன வெங்காயம்- 15

புளி – ஒரு எலுமிச்சை அளவு

பூண்டு- 15

மிளகாய் தூள்- 1தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம்- சிறிதளவு

தாளிப்பதற்கு எண்ணெய்- 1 தே.கரண்டி

கடலை பருப்பு- 1/2 தே.கரண்டி

உளுந்து- 1/2 தே.கரண்டி

சீரகம்- 1/4 தே.கரண்டி

கறிவேப்பிலை- சிறிதளவு

இதய ஆரோக்கியம் முதல் கண்பார்வை வரை.. அற்புதம் செய்யும் பசலை கீரை! இப்படி சாப்பிடுங்க | Pasalai Keera Thokku Health Benefits In Tamil

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம்,சின்ன வெங்காயம்,புளி,பூண்டு, மிளகாய் தூள்,உப்பு மற்றும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து,நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கீரையை சுத்தம் செய்து பொடியாக வெட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இதய ஆரோக்கியம் முதல் கண்பார்வை வரை.. அற்புதம் செய்யும் பசலை கீரை! இப்படி சாப்பிடுங்க | Pasalai Keera Thokku Health Benefits In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூானதும், கடலை பருப்பு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து, அரைத்துவைத்த பேஸ்டை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரையில் கலந்துவிட்டு, நறுக்கிய கீரையை சேர்த்து வேகவிட வேண்டும்.

கீரை நன்றாக வதங்கி தொக்கு பதத்துக்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் அருமையான கீரை தொக்கு தயார்.     

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *