கவிதைகள்

கோடையில் மழையா…. கவிதை… யாழ் எஸ் ராகவன்

அன்றாடங்கள் தரும் சலிப்பு திகட்டும் பொழுது
எதார்த்தத்தை காரி ஊழும் போது
எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி
சுதந்திரமாய் சிறக விரிக்கும் பறவைகளை பார்க்கும் பொழுது

நோட்டுகள் எல்லாம் சில்லறை மாறி போய்
சில்லறைகளை பொறுக்க வேண்டிய
மாதக் கடைசி சூழலில்
வாய்பாடை மனனம் செய்யும் வேளையில்

முற்றத்தில் கொத்தித் திரியும் கோழி
கசிந்துருகும் இசை மொழியில் பேசிய தருணம்

கோடையில் மழையா
எத்தனை சென்டிமீட்டர்
வீட்டுக்குள் கண்ணீர் வந்துவிடுமா
நனையாமல் எப்படி எல்லோரும் வீட்டுக்கு செல்வார்கள்
இப்படி எல்லாம் யோசித்தபடி
இருசக்கர வாகனத்தில் கடக்கும் பொழுது
தோகை விரிக்கும் அழகு மயில் கண்ட நிமிடம்

சாலையோர பிச்சைக்காரன்
தேர்தலில் வாக்கு சேகரிப்பவன்
விபச்சாரத்திலும் ஏமாற்றப்பட்ட பெண்ணொருத்தி நடந்து செல்கையில்
எந்த ஒரு யோசனையும் இன்றி
கரண்ட் கம்பில் கால் தூக்கும்
நன்றியின் உருவத்தை பார்த்த வேளை
இப்படியாக

தற்செயல்கள் தரும் அலாதி அனுபவம் திட்டமிடுதலில் ஒரு பொழுதும் வாய்ப்பதில்லை..

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *