பலதும் பத்தும்

மத்திய கிழக்கு போரால் சாதனைப்படைத்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம்

மத்திய கிழக்கு போரால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் கப்பல் போக்குவரத்தில் சிறந்த மாற்று வழியாகவும் மையமாக மாறியுள்ளதாக ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோதல், உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பாரிய இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. ஹர்முஸ் நீரிணையில் ஈரான் விதித்துள்ள கட்டுப்பாடுகள் பிரதான எண்ணெய் போக்குவரத்து பாதைகளை பாதித்துள்ளன.

இதனால் கப்பல் சேவைகள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இதன் விளைவாக பரபரப்பான கிழக்கு-மேற்கு கப்பல் பாதையில் அமைந்துள்ள இலங்கையின் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரச்சினை விளைவிக்கும் பகுதிகளைத் தவிர்ப்பதன் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக அம்பாந்தோட்டை துறைமுகம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் கேள்வியைக் கையாள்வதற்காக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அண்மையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

துறைமுகத்தின் வாகனக் கையாளும் முற்றத்தின் கொள்ளளவு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதோடுஇ கொள்கலன் முற்றத்தின் வசதிகள் 30 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கப்பல் பாதையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் மாத்திரமே அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அமைந்துள்ளமை கப்பல்கள் தாமதமின்றி இலகுவாக திசைமாறி வருவதற்கு இடமளிக்கிறது.

தற்போதைய சூழ்நிலையானது உலகளாவிய கப்பல் போக்குவரத்து முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பிரதிபலிப்பதாகவும் வாகனங்கள் மற்றும் கொள்கலன்களின் வருகை அதிகரித்ததன் மூலம் செயல்பாடுகள் சாதனை அளவை எட்டியுள்ளன.

தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் உள்கட்டமைப்பு வசதிகளிலும் முதலீடு செய்துள்ளது.

அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கிரேன்கள் மற்றும் டிரெய்லர்கள் உள்ளிட்ட புதிய உபகரணங்களுக்காக 108 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகஇ இத்துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் ஒரு பிரதான விநியோக மற்றும் மீள்-ஏற்றுமதி மையமாக மாற்றமடைந்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *