பலதும் பத்தும்

777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த பெண்!

777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி இலங்கை பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். குறித்த காட்சிப்படுத்தும் நிகழ்வு  நடைபெற்றது.

கனடாவில் வாழும் இலங்கை பெண்ணான ஆயுர்வேத வைத்தியர் குமுதினி கோபாலகிருஸ்ணன் குறித்த கின்னஸ் சாதனைக்காக குறித்த நிகழ்வை நடத்தினார்.

இதற்கு முன்னர் அமெரிக்கர் ஒருவர் 527 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சி படுத்தி கின்னஸில் இடம் பிடித்திருந்தார்.

குறித்த சாதனையை தாண்டி 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து குறித்த சாதனையை பதிவு செய்தார்.

கனடாவில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஸ்ணன் ஆயுர்வேத வைத்தியராக சேவை செய்து வருகின்றார்.

தனது வாழ்நாளில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற கனவுடன் கடந்த 30 வருடமாக மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து வந்தார்.

குறித்த கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருந்த அவர், தனது சாதனையை இலங்கையில் நிகழ்த்தும் நோக்குடன் நேற்று தனது சாதனை பதிவினை மேற்கொண்டார்.

முறிகண்டி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் குறித்த காட்சிப்படுத்தலும், உறுதிப்படுத்தும் நிகழ்வும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *