பலதும் பத்தும்
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஈரான் போர் ; ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய செய்தி

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
NBC ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அத்துடன் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் “முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன” (Coming to an end) என்று ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்களத்தில் அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்” (We’re doing great) எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் விரைவில் முடிவடையும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினாலும், அது எப்போது என்பது குறித்த தெளிவான காலக்கெடு எதனையும் அவர் வெளியிடவில்லை.
![]()