நடுகைக்காரி 86 …. ஏலையா க.முருகதாசன்

மற்றவர்கள் வீட்டு அடுப்படியாலை புகை வருகிதா சமையல் நடக்குதா என்பதைப் பற்றிக் கதைச்சவர்களே,என்ன சமைக்கேலையோ புகையைக் காணேலை அதுதான் கேட்டனான்,இதை நான் கேட்கேலை உங்களுக்குத் தெரியுந்தானே இந்த இலகையிலை ஆர் ஊர் புதினம் கதைக்கிறது என்று விளாத்தியடி செல்லாச்சி ஆருக்கோ சொல்லிக் கொண்டிருந்தது என்ரை காதிலை விழுந்திது என்று சொல்பவரே சிதமபரப்பிள்ளை தனபாக்கியத்தின் வீட்டுக் கதைகளைக் கதைத்துமிருப்பார் என்பதும் உண்மை.
ஊரவர்களில் சிலர்
புதினம் பேசுவது புதினக் கதைகளை இரசிப்பது ஊர்மக்களில் சிலருக்கு அது சுவையான பொழுது போக்கு.நாகம்மாவுக்கும் வைரவநாதனுக்கும் அந்த அயல் தினத்தந்திகள் எனப் பெயர் சூட்டி வைத்திருந்தது.
இன்று தினத்தந்திகளில் என்ன செய்தி என்று யாராவது கேட்டால் நாகம்மாவினதும் வைரவநாதனினதும் வாயிலிருந்து ஏதாவது செய்தி வந்ததா என்பதுதுதான் அதன் கருத்து.
தினத்தந்திப் பத்திரிகை இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந் வெளிவந்து கொண்டிருந்தது.அப்பத்திரிகை வந்து கொண்டிருந்த காலத்தில் விடுப்புச் சொல்பவர்களுக்கும்,ஊர்க்கதையை தமது கற்பனைக்கேற்ப கதை கேட்போரின் சுவைக்காக கறியில் உப்புப் புளி காரம் சேர்ப்பது போல கொஞ்சம் புழுகையும்,கொஞ்சம் பொய்யைம்,கொஞ்சம் கற்பனையையும் நான் பார்த்தனான் பத்துக் காகங்கள் பறந்து கொண்டிருக்கேக்ஐக இரண்டு வெள்ளைக் காகங்கள் மல்லாக்காய் பறந்தது,காகங்களில் அரிதான வெள்ளைக்காகங்கள் மல்லாக்காய்த்தான் பறப்பவை என்று சொல்வார்களே அப்படி ஆச்சரியக் குறியுடன் சொல்பவர்தான் நாகம்மாவும் வைரவநாதனும் அவர்களுக்குத்தான் ஊருக்குள்ளை தினத்தந்தி என்று பெயர்.

இரண்டு பேரிலையும்,ஒழுங்iயாலை போறவர்கள் நடக்கும் போது நடைக்குத் தக்கதாக தலை மேலையும் கீழையும் போய்வரும்,அதைப் பார்த்தே தன் வீட்டைக் கடந்து போறவர்கள் யார் யார் என்னென்ன நேரம் போனவர்கள் என்பதை அச்சொட்டாகச் சொல்லும் ஆற்றல் நாகம்மாவுக்குத்தான் உண்டு.
தினத்தந்தியில் என்ன புதினமாம் என்று அந்த அயலில் கேட்டால் அது நாகம்மவையும்வைரவநாதனையும்; என்பவர்பளைத்தான் என்பது அந்த அயலில் உள்ளவர்களையும் தாண்டி அந்தக் கிராமத்துக்கே தெரியுமளவிற்கு நாகம்மாவும் வைரவநாதனும் ஒரு புதினம் காவியாகிவிட்டார்.
ஒழுங்iயால் நடந்து போகிறவர்களின் தலையின் தன்மையையும்,நடையின் அசைவுகளையும் வைச்சு அந்த ஒழுங்கையோடு அயலில் இருப்பவர்களா அல்லது அயலில் உள்ளவர்களிடம் வந்து போகிறவர்களா என்பதை கேத்திரகணிதக் கோடுகள் போல அச்சொட்டாக சொல்லும் வல்லமை கொண்டவர்தான் தினத்தந்தி நாகம்மா.
வீட்டு விறாந்தைக்கும் அடுப்படிக்கும் இடையில் நடப்பதும் விறாந்தையிலிருந்து கழுத்தை நிமிர்த்தி ஒழுங்கையைப் பார்ப்பதுமாக இருந்த நாகம்மாவுக்கு வேலிக்கு மேலால் நடந்து வருபவர்களின் தலைகளை வைச்சு இது மங்களேஸ்வரியின் தலை இது மங்களேஸ்வரியின் தாய் தனபாக்கியத்தின் தலை எனப் பரிச்சயப்பட்டதாகவிருக்க முன்னால் தெரிந்த மங்னகளேஸ்வரியின் தலைக்கும் பின்னால் தெரிந்த தனபாக்கியத்தின் தலைக்குமிடையில் தெரிஞ்ச தலை யாரென்பது பிடிபடவேயில்லை,யாற்றை தலையாக இருக்கும் என்பதையறியும்அவாப் பரிதவிப்பில்; துண்டு துண்டாக வெட்:டிய முருக்கங்காய் துண்டுகளையும் வெட்டியதில் மிகுதியான முரக்கங்காயின் நுனிப்பகுதியையும் கத்தியையும் ஆவலாதி காரணமாக ஒரு இடத்தில் வைக்க மறந்து வலது கையில் வெட்டிய முருக்கங்காய்த் துண்டுகளையும் இட துகையில் நுணியோடு உள்ள மிகுதி முருக்கங்காயையும் கத்தியையும் பொத்திபிடித்தபடி படலையை நோக்கி வேகமாகப் போய் படலையைத் திறந்து ஒழுங்கையில் கண் பதிக்கவும் அந்த இடத்துக்கு தனபாக்கியம் வரவும் சரியாக இருந்தது.
ஐஞ்சாறு மீற்றர் முன்னுக்கு மங்களேஸ்வரியும் சிலம்பரசியும் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த நாகம்மா என்ன தனமக்கா மருமோளை அணைச்சிட்டியள் போல என்று சொன்னவள்,தனபாக்கியத்தின் பதிலைப்பற்றி அக்கறைப்படாமல் என்ன இருந்தாலும் மருமோளல்ல அதுவும் செல்லமகனின்ரை பெண்சாதியல்லோ அதுமட்டுமே சொந்தங்கள் தண்ணி மாதிரி தண்ணியை கோடு போட்டு கிழிக்க முடியுமோ என்று கதையாலையே தனபாக்னகியத்தை தன் முன்னால் நிற்க வைக்க அயலுக்குள்ளை முகம் சலிக்க வைக்கக்கூடாதென்று தனபாக்கியமும் நாகம்மா சொல்வதை காது குடுத்து கேட்டது பாதி கேளாதது பாதியாக நின்று கேட்க,தனமக்கா ஆட்களின்ர வாய்க்கே கதவில்லை ஊரின்ரை வாய்க்கு மட்டும் கதவிருக்குமென்று நினைக்கிறியளே,உங்கடை மோன் சங்கத்திலை வேலை செய்த படிச்ச பெட்டையைப் பிடிச்சுப் போட்டான் என்று பல்லுக்கு மேலை நாக்கைப் போட்டு கதைச்சதும் மருமோள் வாய்க்காரி என்று கதைச்சதையக்கா எப்படிச் சொல்வன்
காது குடுத்துக் கேட்க ஏலாது. வாய் புளிச்சதோ புளியம் பழம் புளிச்சதோ என்று உச்சி உச்சி கதைச்சதை அதிகம் ஏன் போவான் இந்த ஒழுங்கையோடு இருந்தவையும் கதைச்சவைதான் சங்குசத்தமாய்:
அதை ஒரு நாளைக்குச் சொல்லுறன் வெட்டின முருக்கங்காயை எங்கை வைச்சனான் என்று தெரியலே இனி அதைத் தேட வேண்டும் என்று நாகம்மா சொல்ல இவ்வளவு நேரமும் அமைதியாக நாகம்மாவின் கதையை வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த தனபாக்கியம்,கையைப் பாருங்கோ என்று சொல்ல அட இஞ்சை வைச்சிருக்கிறன் என்று சொன்னவர் தனமக்கா மோன் வார்ந்து வடிஞ்ச பெட்டையைத்தான் பிடிச்சிருக்கிறான் உண்மையிலை அந்தப் பிள்ளையும் உங்கடை மோளைப் பொல வடிவான பிள்ளைதான் சரி அடுப்பிலை அது இது கிடக்குது என்று வீட்டை நோக்கிப் போக தனபாக்கியமும் தனர்து வீட்டை நோக்கிப் போகிறார்.
நாகம்மாவின் படலையடியில் நின்று தாய் கதைச்சதை தற்செயலாகத் திரும்பிய மங்களேஸ்வரி கவனிச்சதால்,கடைக்கண்ணால் மகளைப் பார்த்த தனபாக்கியத்துக்கு நாங்கள் போறம் நீங்கள் வாருங்கள் என்பது போல சைகைகாட்டி விட்டு தங்களுடைய படலையைத் திறந்து கொண்டு வீட்டு முற்றத்தில் மங்களேஸ்வரியும் சிலம்பரசியும் கால் வைக்க தோட்ட வேலைகள் முடிஞ்சு களைப்போடு வந்த சிதம்பரப்பிள்ளை,வெளிவிறாந்தையில் பாயைப் போட்டு களைப்பாறக் கண்ணயர்ந்தவரை ஆட்கள் வரும் காலடிச்சத்தம் கேட்டு கண்முழித்தவருக்கு சிலம்பரசியும் மகளோடு நிற்பதைக் கண்டதும் ஆச்சரியமாகவிருந்தது,
இவ்வளவு காலமும் வீட்டுப்பக்கமே மருமகள் எட்டிப் பார்க்காமல் இருந்ததைப் பெரிசுபடுத்தாமல் எழுந்து பாயில் இருந்தபடியே வா பிள்ளை வா என்றவர் மருமகளின் முகம் வாடியிருப்பதைக் கண்டு மகளைப் பார்த்து என்ன நடந்தது என்பது போல கண்களால் கேள்வியெழுப்ப அப்பா அண்ணிக்கு மூன்றுநாளாய் விடாத தலையிடியாம் அதுதான் அவா சொன்னதும் நாங்களும் கூட்டிக் கொண்டு வந்திட்டம் ஏதேன் குடிநீர் அவழிச்சுக் குடுக்க வேணும் என்று சொல்லிக் கொண்டிருந்த மகளை இடைமறிச்சு கொம்மா எங்கை என்று கேட்க தினந்தந்தியோடை கதைச்சுக் கொண்டிருக்கிறா என்று சொல்ல,மங்களம் நான் கனமுறை சொல்லியிருக்கிறன் வயசுக்கு மூத்தவையை இப்படி நையாண்டியாய்க் கதைக்கக்கூடாது என்று நாகம்மா உனக்குத் தாய்க்குச் சமனானவள் ,ஊர் உலகம் எப்படியும் கதைக்கட்டும் நாங்கள் அப்படிக் கதைக்கக் கூடாது,அதுவும் நீ அப்படிக் கதைக்காதை நீ அவளின் மகளுக்குச் சமனானவள் அதோடை அவள் எங்கடை அயல் என்றும் தகப்பன் சொல்ல அதை எதிர்பார்க்காத மங்களேஸ்வரி தனது தவறை உணர்ந்தவளாக வீட்டுக்குள் போகிறாள்.
தனது கணவனின் தகப்பனான தனது மாமனார் மகளுக்கு புத்திமதி சொன்னதைப் பார்த்த சிலம்பரசி மாமனாரை மரியாதையோடு பார்க்கிறாள்.நல்ல குடும்பத்தில்தான் தான் மருமகளாகியிருக்கிறேன் எனச் சந்தோசப்பட்படியே விறாந்தை வாசலுக்கூடாக கூடத்துக்குப் போகிறாள்.

மகளுக்கும்,மருமகளுக்கும் பின்னால் கொஞ்சம் தாமதிச்சு வந்து கொண்டிருந்த மனைவி தனபாக்கியத்திடம் என்ன விசயம் என்ன நடந்தது வராத மருமகள் வந்திருக்கிறாள் என்பதை முகசாடையால் சிதம்பரப்பிள்ளை மனைவியிடம் கேட்க அதைப் பிறகு சொல்லறன் என்றவள், மங்களம் அண்ணி உடுப்பொன்றும் கொண்டுவரவில்லை,உன்ரை கவுனிலை மினுக்கி வைச்சதை அண்ணிக்குக் குடு,கொண்ணை பின்னேரம் வரேக்கிலை அண்ணியின்ரை வீட்டு உடுப்புகளை எடுப்பிப்பம் என்று சொல்ல சரியம்மா நீங்கள் சொல்லாட்டிலும் அண்ணிக்கு என்ன செய்யு வேண்டும் என்று எனக்குத் தெரியுமம்மா என்று மங்களேஸ்வரி சொல்கிறாள்.
கொஞ்சம் பாயை சுவரோடை அரக்குங்கோ சாய்ஞ்சு கொண்டு இருப்பம் என்று தனபாக்கியம் சொல்ல சிதம்பரப்பிள்ளை தான் படுத்திருந்த பாயை சுவரோடை அரக்குகிறார்.
சங்கக்கடையிலை சனவெக்கையில் இடிபட்டு நின்ற சோர்வு,,தெல்லிப்பழைச் சந்தியிலிருநது அம்பனைக்கு நடந்த வந்த களை எல்லாமாக தனபாக்கியத்தை அலுப்பாக்கிவிடுகிறது.
தலையணியையும் முதுகுக்குப் போட்டுப்படுத்த துவாயையையும் சுவரோரமாக தள்ளி வைசசத சிதம்பரப்பிள்ளையும் சுவரில் சாய்ஞ்சபடி முற்றத்து மாமரத்தில் இருந்த மாங்காயை கடிச்சுக் கொண்டிருக்கும் அணிலையே பார்த்தக் கொண்டிருக்கிறார்.
மங்களேஸ்வரியின் கவுனைப் போட்டிருந்த சிலம்பரசி மெதுவாக வந்து மாமியாருக்கு அருகில் உட்காருகிறாள்.
அவளுடைய நிறத்துக்கு றோசாப்பூக்கள் போட்ட கவுன் அளை இன்னும் எடுப்பாகக் காட்டுகின்றது.
மருமகளைப் பார்த்து இரசிக்கிறாள் தனபாக்கியம். சமைச்சு வைச்சிட்டுப் போனனான் நீங்கள் சாப்பிட்டியளோ என்று கணவனைப் பார்த்துக் கேட்க தோட்டக் களையோடை வந்தனான் சாப்பிடாமலா இருந்திருப்பன் என்று பதில் சொல்கிறார் சிதம்பரப்பிள்ளை.
அப்பொழுது மங்களேஸ்வரியும் வந்து சிலம்பரசிக்குப்; பக்கத்தில் உட்காருகிறாள்.
தெல்லிப்பழைச் சங்கப் புடவைக் கடையில் பார்வதியுடன் வாக்குவாதப்பட்டதையோ அதனால் சங்க முகாமையாளரும் தலைவரும் சிலம்பரசியை விசாரித்து அவளை ஒரு கிழமைக்கு பணி இடைநிறுத்தம் செய்ததையோ அவை எதுவுமே நடக்காதது போல சிலம்பரசி அமைதியாக இருந்தாலும்,இதுவரையில் வீட்டுப்பக்கமே எட்டிப்பாராமல் இருந்தவளை தெல்லிப்பழைச் சங்கத்தில் அவளைப் பாதிச்சு ஏதோ ஒரு சம்பவம் தங்கடை வீட்டிலை கொண்டு வந்துவிட்டிருக்குது என்பதை சிதம்பரபப்பிள்ளையால் உணர முடிந்தது.

இந்தத் திமிர் பிடிச்ச பிள்ளையையே சிதம்பரியின்ரை மோன் கண் வைச்சவன் என்று ஊருக்குள் சிலரும்,சிலம்பரசி பட்டதாரி என்பதால் பிடிச்சாலும் முருகதாசன் புளியம்கொம்பைத்தான் பிடிச்சிருக்கிறான் என்று இன்னும் சிலரும் அரசல்புரசலாக கதைக்கிறது. சிதம்பரப்பிள்ளையிள்ளையின்ரை காதிலும்,தனபாக்கியத்தின் காதிலும் விழுந்த போதிலும் உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது என்பதால் சிதரம்பிள்ளையோ தனபாக்கியமோ ஊர் கதைக்கிறதை ஒரு காதாலை கேட்டு மற்றக் காதாலை விட்டிட்டு இருப்பார்கள்.
மற்றவர்கள் வீட்டு அடுப்படியாலை புகை வருகிதா சமையல் நடக்குதா என்பதைப் பற்றிக் கதைச்சவர்களே,என்ன சமைக்கேலையோ புகையைக் காணேலை அதுதான் கேட்டனான்,இதை நான் கேட்கேலை உங்களுக்குத் தெரியுந்தானே இந்த இலகையிலை ஆர் ஊர் புதினம் கதைக்கிறது என்று விளாத்தியடி செல்லாச்சி ஆருக்கோ சொல்லிக் கொண்டிருந்தது என்ரை காதிலையும் விழுந்தது என்று சொல்பவரே சிதமபரப்பிள்ளை தனபாக்கியத்தின் வீட்டுக் கதைகளைக் கதைத்துமிருப்பார் என்பதும் உண்மை.தினத்தந்தி நாகம்மா ஊர்க்கதை காவுகிறவா என்ற போதிலும் இன்னும் சிலர் நாகம்மாவுக்கு சளைத்தவர்களல்ல.
(தொடரும்…)
![]()