கவிதைகள்

இப்புவி கூட ஏற்கவே மறுக்கும் !…. கவிதை… ஜெயராமசர்மா

சொந்த உழைப்பில் வாழ்வது சுகமே
மற்றவர் உழைப்பில் வாழ்வது இழிவே
உழைக்கும் பொருளே நிறைவைக் கொடுக்கும்
அதனை மனத்தில் இருத்துதல் அவசியம்

உழைக்கும் எண்ணம் உயர்வைக் கொடுக்கும்
அடுத்தவர் உழைப்பு அஜீரண மளிக்கும்
சுயமே என்றும் சுகமாய் இருக்கும்
மற்றவர் உணவை உண்பது முறையா

சீமா னாயினும் சிறியவ னாயினும்
அவரவர் உழைப்பு ஆனந்த மளிக்கும்
மற்றவர் உழைப்பில் வாழ நினைத்தால்
அற்பத் தனமாய் அசிங்கமா யமைந்திடும்

உழைக்கும் வலிமை உடலில் இருக்க
உழைக்கா திருந்தால் உழைப்பே வெறுக்கும்
மற்றவர் உழைக்க வாழும் எண்ணம்
இப்புவி கூட ஏற்கவே மறுக்கும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *