கவிதைகள்

மாநிலத்தில் அதுவே மாசொர்க்க மாகும்!… கவிதை… ஜெயராமசர்மா

சொர்க்கமும் நரகமும் தூரவே இல்லை
பக்கமே இருக்கு பார்க்காம லிருக்கிறோம்
தேடியே நாமும் ஓடிட வேண்டாம்
தெளிந்த நல்லறிவால் இரண்டையும் காணலாம்

மனைவியொடு மக்கள் மனநிறைவைத் தந்தால்
மாநிலத்தில் அதுவே மாசொர்க்க மாகும்
தினமுமே அவர்கள் மனமுடையச் செய்தால்
அதுநமக்கு வாழ்வில் பெருநரக மாகும்

அடங்காத மனைவி அன்பிலா மக்கள்
அமைந்தாலே வாழ்வில் அதுநரக மாகும்
அணைக்கின்ற மனைவி அன்பான மக்கள்
அமைகின்ற வேளை அதுசொர்க்க மாகும்

பொய்யான கணவன் பொறுக்காத மக்கள்
மெய்யான சொர்க்கத்தை விழுங்கிவிடும் நரகம்
அன்பான கணவன் பண்பான மனைவி
அறிவான மக்கள் அதுசொர்க்க மாகும்

பொய்யான நட்பு பொறுப்பில்லா உறவு
மெய்யில்லா சோதரர்கள் எல்லாமே நரகம்
ஆபத்தில் உதவி அன்புதனை அளித்து
அபயகரம் கொடுத்தால் அதுசொர்க்க மாகும்

மாசில்லா மனமே மாசொர்க்க மாகும்
வாழ்த்தி நிற்கும்மனமே மண்ணிலே சொர்க்கம்
அன்பாக இருந்து அகமகிழ வைத்தால்
அனைவர்க்கு மதுவே பெருசொர்க்க மாகும் ।

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

3 Comments

  1. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவார்க்கு நல்லிடம் காட்டி வழி சொன்ன அறிஞர் வாழ்க.

  2. “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவார்க்கு ” நல்லிடம் காட்டி வழி சொன்ன அறிஞர்க்கு நன்றி.

  3. “இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைவார்க்கு ” நல்லிடம் காட்டி வழி சொன்ன அறிஞர்க்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *