பலதும் பத்தும்

வரிக்குதிரைகளுக்கு கருப்பு – வெள்ளை கோடுகள் ஏன்? வியக்க வைக்கும் காரணம்!

இயற்கையில் நம்மை வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு ஏராளமான விந்தைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் வரிக்குதிரைகளின் நேர்த்தியான கருப்பு வெள்ளை கோடுகள்.

அவற்றை பார்கும் போது கருப்பு உடலில் வெள்ளை வரிகள் இருக்கின்றதா? அல்லது வெள்ளை உடலில் கருப்பு கோடுகள் இருக்கின்றதா? என்ற சந்தேகம் பலருக்கு தோன்றியிருக்கும்.

வரிக்குதிரைகள் கோடுகள் எப்படி உருவானது என்பது குறித்தும், அந்த கோடுகளால் அவற்றுக்கு கிடைக்கு பயன்கள் குறித்தும் விரிவான அறிவியல் விளக்கத்தை இந்த பதிவில் பார்க்லாம்.

வரிக்குதிரைகள் மந்தையாக நிற்கும்பொழுது அதனைத் தொடர்ந்து பார்த்தால், கண்கள் கூசும் அளவுக்கு ஒரு ஒளியியல் மாயை ஏற்படுத்தும் வகையில், ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல் தோற்றும்.

இவற்றை சாமதாரணமாக பார்த்தால், எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அவற்றின் கோடுகள் மனிதர்களின் கைரேகையை போல் தனித்துவமானது என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வரிக்குதிரைகள் உண்மையில் கருப்பு உடலமைப்பில் வெள்ளை கோடுகளைக் கொண்டவை. வரிக்குதிரைகள் கருவில் இருக்கும் போது கருப்பு நிறத்தில் கோடுகள் ஏதும் இன்றியே இருக்கும்.

வரிக்குதிரைகளுக்கு இந்த கோடுகள் எதற்கு உதவுகின்றது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் இது அழகுக்காக என்று தான் பெரும்பாலும் நினைப்போம். ஆனால் வரிக்குதிரைகளை கடிக்கும் பூச்சிகள் மற்றும் ஈக்களை விரட்டவும், உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும் இந்த கோடுகள் தான் துணைப்புரிகின்றது.

மேலும் இந்தக் கோடுகள் ஒளியியல் மாயைக் கவசமாகவும் (CAMOUFLAGE) செயல்படுவதாக கருதுகிறார்கள். இது பல வழிகளிலும் இரைக் கொல்லிகளாகிய எதிரிகளிடமிருந்து காக்கின்றன.

உதாரணமாக வரிக்குதிரைகள் அடர்ந்த புல் புதருக்குள் மறைந்திருக்கும்போது இவற்றின் செங்குத்து வரிகள் புல் வளர்ந்திருக்கும் வகையில் புல்லோடு புல்லாக தோற்றமளிக்கும்

இதனால் வரிக்குதிரைகளின் பிரதான எதிரிகளான சிங்கங்கள் நிறக் குருடாக இருப்பதால், அவற்றின் பார்வையில் எல்லாமே கருப்பு வெள்ளையாக காட்சியளிக்கும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதன் விளைவாக வரிக்குதிரைகள் எதிரிகளிடம் இருந்து தப்பித்துக்கொள்கின்றது.

மேலும் சிறுத்தை, புலி போன்ற வேட்டை விலங்குகளால் வரிக்குதிரைகளின் கூட்டம் துரத்தப்படும் பட்சத்தில், அவற்றின் கோடுகள் எதிரிகளின் கண்கள் கூசும் வகையில் இருப்பபதால், இரையை குறி வைக்க முடியாமல் போகும். இதனால் வரிக்குதிரைகள் எளிதில் தப்பித்துவிடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *