கதைகள்

அண்டங்காக்கையும் ஊர்க்குருவியும் – 06 … சோலையூர் குருபரன்

அன்னமிட்ட கை…

அன்று வானம் மூசாப்பாக இருந்தது. கதிரவன் வெளியே வருவதும் மேகத்துக்குப் பின்னால் ஒழிந்து கொள்வதுமாக வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான். சல்லென்ற குளிர் காற்றும் வீசியது. “எங்கோ மழை பெஞ்சிருக்க வேணும். அதான் குளிர் காத்து வீசுது” எனச் சீனிப்பிள்ளை கூறச் சமைக்க வந்தவர்கள் எல்லோரும் ‘ஓம் போல’ என்றனர். இத்தனைக்கும் மத்தியில் மீனாச்சி அம்மாள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

நானறிந்த வரையில் மூன்று தலைமுறையாகப் பசித்து வந்தோருக்கு அன்னமிட்டும் இல்லாதோருக்குக் கொடுத்தும் தவித்து வந்தோருக்கு உள்ளதைக் கொடுத்தும் பழக்கப்பட்டது மீனாச்சி அம்மாளின் குடும்பம். ஒரு கை கொடுப்பதை மறு கைக்குத் தெரியாத வண்ணம் நேரம் காலம் பாராது கொதுத்து வந்தனர். அதிலே சந்தோசமும் கண்டனர். இது இன்று நெற்றல்ல அந்தக் குடும்பத்தின் மூன்று தலைமுறைச் செயற்பாடு. எந்த நேரமும் மூன்று நான்கு பெண்கள் சமைத்துக் கொண்டே இருப்பார்கள். வேளாண்மைக்காரன் தொடக்கம் பட்டிக்காரன்வரை தொழும்பு செய்து கொண்டே இருப்பார்கள்.

மீனாட்சி அம்மாள் அந்தப் பிரதேசத்தில் பெருமையும் புகழும் சிறப்பமிக்க குடும்பத்தில் பிறந்தவள். அந்தக் காலத்தில் கனிஷ்ட இடைநிலைவரை கற்றவள். அப்போது அந்த ஊரில் பாடசாலையில் அவ்வளவுந்தான் கற்கலாம்.

ஊர் குருவி - தமிழ் மொழி கவிதைபிரதேசத்தில் அவர்களைத் தலைமுறை தலைமுறை சார்ந்த போடி பரம்பரை என்பார்கள். அப்பா ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மூலத்தில் கற்றவர். கிராமசபை அக்கிராசனர். வெள்ளையர் பொல் வெண்மையானவர் என்பதனால் அதைக் கொண்டே வெள்ளத்தம்பிப் போடியார் என அழைப்பார்கள். அப்போது மாவட்டத்தில் சாதாரண உத்தியோகத்தர் தொடக்கம் மாவட்ட அரசாங்க அதிபர்வரை அந்தக் குடும்பத்தைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அத்தனை பேரும் புகழும் கொண்டது. அப்பா படித்து நாலுந் தெரிந்தவர் மாத்திரமல்ல பிரதேசத்தில் புகழ்பெற்ற பரிகாரி. நோயாளிகளுக்கு மருந்துகள் தயாரிப்பதற்காக இரண்டு மூன்று பேர் வரை வேலை செய்து கொண்டிருப்பார்கள். எல்லாமே இலவச பரிகாரம்தான்.

மீனாட்சி அம்மாளின் கணவர் பிரதேசத்தில் சீரும் சிறப்புமிக்க புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். ஊரிலுள்ளோரும் பிரதேசத்தில் உள்ளோரும் இக்குடும்பத்தில் உள்ளவர்களைக் கண்டால் வணக்கம் சொல்லி மரியாதையுடன் ஒதுங்கிச் செல்வார்கள். 30 வருடங்களுக்கு முன்னர் ஊரில் நடைபெற்ற எந்த நிகழ்வும் இந்தக் குடும்பத்தை மையப்படுத்தியே அமைந்திருக்கும்.

நாட்டின் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்துச் சில ஆண்டுகளின் அந்தக் குடும்பத்தின் முன்னுரிமை, சிறப்பு மரியாதை ஆகியன கேள்விக்புறி ஆக்கின. இளைஞர்களும் ஆயுதக் குழுக்களும் தலைகாட்ட ஆரம்பித்ததில் இருந்து அவர்களின் முன்னுரிமை படிப்படியாகக் குறைந்தன. இதனால் பலர் பிரதேசத்தைவிட்டு நகரத்தை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். ஆனால் அந்தக் குடும்பம் தம் பரம்பரையாக வாழந்த சோலையூரை விட்டு வெளியேறவில்லை.

ஸ்ரீமாவின் காணி உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் பல ஏக்கர் விவசாயக் காணிகள் அவர்களிடம் இருந்து அரசு பறிமுதல் செய்தது. மீனாச்சி அம்மாளுக்குக் கண்ணுக்குக் கண்ணாகவும் பாதுகாப்பாகவும் இருந்த அப்பாவும் கணவனும் இறந்துவிட்டனர். மீனாட்சி அம்மாள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டாள். தங்களின் தாம்ப்த்திய வாழ்வில் குழந்தைப் பேறு கிட்டவில்லை. அதுவும் அம்மாளுக்கு ஒரு கவலைதான். இருந்தும் ஊரிலுள்ள ஏழை, எழியவர்களின் குழந்தைகளைத் தன் பிள்ளைகள் போலவே நினைக்கிறாள். அது அம்மாளின் கவலையைக் குறைத்தன. இருந்தும் அன்னமிடுவதைக் கைவிடவில்லை. சோலையூரில் அந்தக் குடும்பத்தினால் பலர் வாழ்ந்தனர். சிலர் இன்றும் வாழ்கின்றனர்.

அம்மாள் தனது பரம்பரைக் காணி, நில, புலங்களை விற்று அன்னமிட்டுக் கொண்டிருக்கிறாள். அன்றுதொடக்கம் இன்றுவரை அருகிலுள்ள சில குடும்பங்கள் பக்கபலமாக இருந்து பணி தொடர உதவிக் கொண்டிருக்கின்றனர். இப்போது அம்மாளுக்கு 75 வயதைத் தாண்டிவிட்டது. உடல் தளர்ந்த நிலையிலும் தமது முன்னோர் தொடங்கி வைத்த பணியைத் தளர்வுறாமல் தொடர்ந்து கொண்டிருப்பது வியப்புக்குரியது.

‘நான் அமுது படைத்துக் கொண்டிருக்கும் போதே ஆண்டவன் என்ட உசிர எடுத்திட வேணும். யாருக்கும் தொந்தரவில்லாமல், அழுந்தாமல் இறைவனடி சேர்ந்திட வேண்டும்’ என்ற மனவுறுதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ‘இடையே ‘பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லையே. அது நடக்கும் போது நடக்கும்’ என்ற தெம்போடு தம் முன்னோர் ஆரம்பித்து நடாததி வந்த ஆலய, சமய, சமூகப் பணிகளை நிறுத்தாமல் இன்றும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாள் அம்மாள். இறைவன் யாரையும் கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையோடு தளராது பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

காணி நில புலங்களும் சுருங்கிக் கொண்டே செல்கின்றன. ‘முன்புபோல் தைரியத்தோடு எழுந்து நடமாட முடியவில்லையே’ என்ற கவலையும் அம்மாளுக்கு இருக்கத்தான் செய்கிறது. அம்மாள் ஏழைகள்மீது காட்டும் அன்பு அழவிட முடியாதது. அம்மாளின் வீட்டுக்கருகில் உள்ள மாமரம், தென்னை மரங்களில் பரம்பரை பரம்பரையாகக் கூடு கட்டி அங்கேயே உண்டு உறங்கி வாழும் அண்டங்காக்கைக்கு அம்மாளைப் நன்கு தெரியும்.

crow, jungle - தமிழ் விக்சனரிஅத்தனை செல்வமிருந்தும் பெரிய வீடுவாசல் கட்டாமல் தனது தந்தை சீதனமாகக் கொடுதத ஓலை வீட்டிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் மீனாட்சி அம்மாள். அன்றும் இன்றும் நாடி வந்தவர்களுக்கு விருந்தளித்து வருவிருந்து காத்திருந்து மூவெளையும் நேரத்துக்குச் சாப்பிடாமல் குடல்புண், நீரிழிவு, இரத்த அழுத்தம் எனத் தொற்றா நோய்கள் ஒட்டிக் கொண்டும் தளர்ந்த நிலையிலும் ஓயாமல் ஒழியாமல் தனது விருந்தளிக்கும் பணியைத் தொடர்ந்த வண்ணமே வாழ்கிறாள்.

அன்று நண்பகல் 12.00 மணி இருக்கும் சமையல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது தலை சுற்றி, நிலை தடுமாறி, மயக்கமடைந்து நிலத்தில் விழுந்துவிட்டாள். பேச்சு மூச்சைக் காணவில்லை. உடம்பு குளிர்ந்துவிட்டது. அங்கே சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உறவுப் பெணகள் ஒப்பாரி வைத்து அழுகின்றனர். முச்சக்கர வண்டிக்கு அழைப்பு விடுக்கின்றனர். இவை எல்லாவற்றையும் மாமரக் கிளையில் அமர்ந்திருந்து அண்டங்காக்கை பார்த்து அழுதுவிட்டது. பரம்பரை பரம்பரையாக அந்த அம்மாள்தானே உணவு கொடுக்கிறாள்.

இந்தப் பந்தபாசம் காகத்துக்கு இருக்காதா என்ன. அண்டங்காக்கை இடைவிடாது கரைந்து அக்கம் பக்கத்தில் இருந்த காகங்கள் எல்லாவற்றையும் அழைத்துவிட்டது. எல்லாக் காகங்களும் ஆளுக்காள் முகத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றன. முச்சக்கர வண்டியும் வந்துவிட்டது. நின்றவர்கள் அழுது கண்ணீழ் விட்டவண்ணம் வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கின்றனர். காக்கைகள் அழுது புலம்பிய சோகத்துடன் உணவின்றிப் பறந்து செல்கின்றன.

சோகத்துடன் பறந்து சென்ற அண்டங்காக்கை அருகில் இருந்த வேப்பமரக் கிளை ஒன்றில்Oor Kuruvi • A podcast on Spotify for Creators வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கிறது. அந்த வழியால் வந்த ஊர்க்குருவி காகத்தைக் கண்டுவிட்டது. தாளப்பறந்துவந்து அருகில் அமர்ந்து கொண்டு காகத்தின் முகத்தைப் பார்த்தது. தான் வநது அமர்ந்து கொண்டதும் தெரியாமல் வாட்டத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து “என்னக்கா எப்பவும் இல்லாதமாதிரி்ப் பெருஞ் சோகத்தோட இருக்கீங்க. என்னக்கா நடந்தது” என்றதும் திடுக்கிட்டுக் கழுத்தைத் திருப்பி ஊர்க்குருவியை ஏற இறங்கப் பார்த்துப் பெருமூச்சுவிட்டது.

“தம்பி மீனாச்சி அம்மாவை உனக்குத் தெரியுந்தானே” “அந்த அம்மாவைத் தெரியாம இந்தப் பகுதியில இளசுகளைத் தவிர யாரும் இருக்க முடியுமா அக்கா? என்னண்டு சொல்லுங்கோ”
“பரம்பரை பரம்பரையாகடிஃ பல்லாயிரக் கணக்கானோருக்குச் சாப்பாடு போட்ட குடும்பமெண்டு பலரும் சொல்லுவாங்க. மீனாச்சி அம்மா உடம்புக்கு முடியாத நிலையிலும் இண்டைக்கும் படைச்சுப் போட்டுக் கொண்டுதானே இருக்குது. பல உடல் வருத்தங்களோட விடாமச் செய்து கொண்டிருக்குது. இண்டைக்குத் அன்ரி மயக்கம் போட்டு விழுந்துத்து.

என்ன ஏதெண்டு எதுவுந் தெரியாது. எல்லாரும் அழுது கொண்டிருக்காங்க. நம்மட இனசனங்களும் வந்து அழுதுத்துப் பட்டிணியோட போனதுகள். அந்த அம்மாள் செய்த புண்ணியத்துக்கு ஆண்டவன்தான் காப்பத்தணும்” எனத் தழுதழுத்த குரலில் கூறி விம்மி விம்மி அழுதது அண்டங்காக்கை.

உங்க கைரேகை எப்படியிருக்கு? செல்வந்தராகும் யோகம் இருக்கா? - ரேகை ஜோதிடம் |  Money Line In Palmistry: Know Your Financial Fate - Tamil Oneindia‘அக்கா மூண்டு தலைமுறையாக ஊருக்கு அவிச்சுப் போட்ட குடும்பம் எண்டு ஊருக்க பலருக்கும் தெரியும். அவங்கட முன்னோர் செய்தத அந்த அம்மாவும் செய்து வாறாங்க. எனக்குக் கவல என்னெண்டா இந்த வயதிலும் இத்தனை நோயையும் வெச்சிக் கொண்டு அந்தக் கடமைய விடாமச் செய்து கொண்டிருக்கிறாவே எண்டுதான். இந்த ஊரில உள்ளவங்க அந்த அம்மாவக் கையெடுத்துக் கும்பிடணும். இந்தக் கால கட்டத்தில மதிப்பு, மழியாதை எல்லாம் குறைஞ்சு போச்சு.

அதிலும் இன்றய இளசுகள் பலருக்கு அதெல்லாம் சொல்லியும் விளங்காது. இண்டைக்குப் பலதுகள் கையில சிமார்ட் போணோடும், போதையோடும் திரியுதுகள். சிலர் பெற்றாருக்கும் அடிக்குதுகளாம். எல்லாமே தல கீழா மாறிக் கிடக்குது. ஊர்ப் பெரியவங்களின் கதையக்கூடக் கேக்குதுகளில்லை. கெட்டுப் போய்க் கிடக்குது. மீனாச்சி அம்மா குணமாகித் திரும்பி வரவேணுமெண்டு பிராத்திப்போம். அக்கா எனக்கும் நேரமாகுது. பேகவேணும்” எனக் கூறிக் கொண்டு சிறகடித்துப் பறந்து சென்றது.

ஊரக்குருவியோடு பேசியதில் மனச் சுமையை இறக்கி வைத்த திருப்தியோடு நீண்ட பெருமூச்சுவிட்டு சொண்டினால் இறகுகளை நீவிவிட்டுத் தனது கூட்டுக்குப் பறந்து சென்றது. ஊர்குருவி பறந்து வான் வெளியில் கலந்துவிட்டது.

மீனாட்சி அம்மாள் தேறிவிட்டாள். இரத்த அமுத்தமும், அல்சரும் கூடியதால் மயக்கம் வந்தது. ஒரு நாள் ஓய்வெடுத்துத்து வீட்டுக்குப் போகட்டும் என வைத்தியர். கூறிவிட்டனார். மறுநாள் வீட்டுக்கு வந்ததும் அன்னமிடும் பணியை ஆரம்பித்துவிட்டாள். உறவினர்களும், பணியாட்களும் தீவிரமாகச் செயற்படுகின்றனர்…..

களம் தொடரும்……

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button