இலங்கை

யாழில் சிவசேனை அமைப்பினரின் போராட்டத்தை குழப்ப சிலர் முயற்சி; பொலிஸார் விரட்டிக் கலைத்தனர் 

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் உள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் நேற்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென்.தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாத நிலையில் சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் இருந்து “கெப்” ரக வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று தெரேசா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்தனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் குழப்பம் விளைவித்த வர்களை விரட்டிக் கலைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *