பலதும் பத்தும்

10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும்!

கடந்த சில வருடங்களாகவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் AI சாஃப்ட்வேர் துறையில் பிரபலமாகி வருகிறது.

அதோடு, தவிர்க்க முடியாத ஒன்றாகவும் மாறிவிட்டது. சாஃப்ட்வேர் துறையில் எழுதப்படும் கோடிங்கை AI சுலபமாக செய்து விடுகிறது.

எனவே சாஃப்ட்வேர் துறையில் எதிர்காலத்தில் மனிதர்களை விட AI அதிக ஆதிக்கம் செலுத்தும் என சொல்லப்படுகிறது.

எனவேதான் உலகம் முழுவதும் கல்லூரிகளில் AI தொடர்பான பாடங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இளைஞர்களும் AI தொடர்பான படிப்புகளை மிகவும் ஆர்வமாக படிக்கிறார்கள்.

இந்நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க்,

‘இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் AI – யிடம் தங்கள் கட்டுப்பட்டை இழப்பார்கள். 2036 ஆம் வருடத்திற்குள் உலகம் ரோபோக்கள் வசம் செல்லும், அதேநேரம் மனித குலத்தை AI அழிப்பதற்கு 10 முதல் 20 சதவீதம் வரை வாய்ப்புகள் இருக்கிறது’ எனவும் அவர் பகீர் கிளப்பினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button