முச்சந்தி

பொலிஸ், விசேட அதிரடிப்படையினரின் ஒருநாள் சுற்றிவளைப்பில் 1007 பேர் கைது; இந்த வருடம் ஜூ லை வரை 122,913 பேர் கைது

பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அடங்கலாக பாதுகாப்பு தரப்பினரால் கடந்த 18ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையை சேர்ந்த 6782 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்கள் 26,560 பேரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், 11,053 வாகனங்களையும் 7844 மோட்டார் சைக்கிள்களையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது போதைப் பொருட்களுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் தொடர்பில் 989 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 18 பேரும் கைதாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை போதைப் பொருளை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கை ஊடாக கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூ லை 29ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் போதைப் பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த காலப்பகுதியில்ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட பெருமளவிலான போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *