முச்சந்தி
அல்ஜசீரா ஊடகவியாளர் இஸ்ரேலால் படுகொலை…. பாலஸ்தீன ஊடகம் மீதான தொடரும் அச்சுறுத்தல்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஊடகங்கள் சந்தித்த சவால்களும், அத்துமீறல்களும் எண்ணிலடங்காதவை. தற்போதய இஸ்ரேல்-பாலஸ்தீன போரால் இதுவரை 286 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.
1948 இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு போர் நிருபர்கள், தொழில்முறை ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அல்ஜசிரா ஊடகவியலாளர்கள் மீது 10/8/25 இஸ்ரேலிய இராணுவத்தால் இலக்கு வைக்கப்பட்ட படுகொலை நிகழ்ந்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மற்றொரு அப்பட்டமான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதலில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதனை ஊடக சுதந்திர மீறல் என்று சர்வதேச ஊடக நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.ஐந்து அல்ஜசீரா ஊடகர்கள் கொலை:
காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் இந்த ஐந்து அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்ஜசிரா நிருபர்கள் அனஸ் அல்-ஷெரிப், முகமது கிரீகே, ஒளிப்பதிவாளர் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால் மற்றும் மோமென் அலிவா ஆகியோர் கொல்லப்பட்டனர். மருத்துவமனையின் பிரதான வாயிலில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தில் அந்த படுகொலை திட்டம் குறிவைக்கப்பட்டது என்று அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே, அனஸ் அல்-ஷெரிப்பை குறிவைத்ததாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) உறுதிப்படுத்தியது. அவர் ஹமாஸில் ஒரு பயங்கரவாதப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார் என்று இஸ்ரேலிய இராணுவம் அப்பட்டமான பொய்யை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன ஊடகம் மீதான தொடர் அச்சுறுத்தல்:
பாலஸ்தீனத்தில் 7 ஒக்ரோபர் 2022 இலிருந்து இன்றுவரை 286 ஊடகவியலாளர்கள் காசா மண்ணில் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அல்ஜசீராவின் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த வருடம 22/9/24 ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் உள்ள அல் ஜசீராவின் அலுவலகத்தை இஸ்ரேலிய இராணுவம் வலுக்கட்டாயமாக மூடியது. இதனை உலகளாவிய பத்திரிகை சுதந்திர உரிமை ஆர்வலர்கள் கண்டித்தனர். இது பத்திரிகை மீதான கொடுந் தாக்குதல் என கூறப்பட்டது.
காசாவில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையினை பற்றி நீண்டகாலமாக அல் ஜசீரா விரிவான செய்திகளை வழங்கி வருகிறது.
இதுவரை காசாவில் போர் தொடங்கியதில் இருந்து பல அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் உள்ள அல்ஜசிரா அலுவலகம் பலமுறை குண்டுவீசி தாக்கப்பட்டது. ஆயினும் செய்தியாளர்களை குறிவைக்கவில்லை என்று இஸ்ரேல் அப்பட்டமாக பொய் கூறி வருகிறது.
பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது :

சர்வதேச பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, இஸ்ரேலிய தாக்குதலாலை கடுமையாக கண்டித்துள்ளது.
அல் ஜசீராவை தணிக்கை செய்வதற்கான இஸ்ரேலின் முயற்சிகள், பிராந்தியத்தில் பல உயிர்களை பறித்த கொடும் போர் பற்றிய தகவலுக்கான பொதுமக்களின் உரிமையை கடுமையாக பாதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
அல் ஜசீராவின் பத்திரிக்கையாளர்கள் இந்த நெருக்கடியான நேரத்திலும் திறமையாக பணியாற்றி உள்ளனர். எப்பொழுதும் அவர்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என சர்வதேச பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) கண்டனம்:
எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) அல் ஜசீரா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தொடர் அழுத்தங்களை கண்டிக்கிறது என்றும் கூறியுள்ளது. அல் ஜசீரா ஊடகத்தெ குறிவைத்து வெளிநாட்டு ஊடகங்களை மூடுவதற்கு இஸ்ரேல் அரசாங்கத்தை அனுமதிக்கும் இஸ்ரேலிய சட்டத்தை ரத்து செய்ய RSF முன்பு அழைப்பு விடுத்திருந்தது.அத்துடன் பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் சங்கம், இஸ்ரேலிய இராணுவ கொடூரத்தை கண்டனம் செய்ததுள்ளது. இது பத்திரிகை பணி மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிரான ஒரு புதிய ஆக்கிரமிப்பு என்றும் கூறியுள்ளது.
பத்திரிகையாளர்க்கு இஸ்ரேலின் நேரடி அச்சுறுத்தல்:
பாலஸ்தீனத்தில் அல் அய்யம்,அல்-ஹயாத் அல்-ஜடிதா ,அல் கர்மில் ,அல் மனார்,அல் மசார் ஆகிய பத்திரிகைகள் போர்க்காலத்திலும் வெளிவந்தன.
தொடர்ந்து காசா நகரில் இஸ்ரேலின் நேரடி அச்சுறுத்தல் பத்திரிகையாளர்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளதுடன் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் அல் குத்ஸ்,பாலாஸ்தீன் அல்-முஸ்லிமா,அல்-இத்திஹாத்,்கு ல் அல் அரபு அல்-மதீனா ஆகிய ஊடகங்களின் பத்திரிகையாளர்க்கு இஸ்ரேலின் நேரடி அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் – இஸ்ரேல் படையினருக்கும் இடையே ஆரம்பித்த போர் இன்னமும் தீவிரமாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் படையினர் காசா பகுதியை கொடூரமாக தாக்கி அழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காசாவில் போர் பற்றிய விவரங்களைச் சேகரிக்க பல்வேறு நாட்டில் இருந்து பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர். தகவல் சேகரிக்கச் சென்றவர்களில், இதுவரை 286 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில், 4 பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
பல பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் நேரடி அச்சுறுத்தலை கொடுத்துள்ளதால் போர்க்கள
தகவல்களை சேகரிப்பதை பத்திரிக்கையாளர்கள் குறைத்துள்ளனர். அத்துடன் பாலஸ்தீன பத்திரிகையாளர்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()