முச்சந்தி
அலாஸ்காவில் டிரம்ப் – புட்டின் சந்திப்பு… ரஷ்யா – அமெரிக்கா – உக்ரைன் நிலைப்பாடு என்ன?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் புட்டுனுக்கும் அலாஸ்காவில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையை உலகமே உற்று நோக்கி வருகிறது. புட்டினுக்கும் டிரம்புக்கும் இடையே நடைபெற இருக்கும் இந்த பேச்சுவார்த்தைக்கான இடமாக அலாஸ்கா தேர்வு செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
அலாஸ்கா தேர்வு செய்யப்பட்டது ஏன்?
ரஷ்யாவும் அமெரிக்காவுக்கும் இடையே எல்லைப் பகுதியான அலாஸ்காவில் இந்த சந்திப்பு நடைபெற இருப்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அலாஸ்காவை பொறுத்தவரை புவியியல் ரீதியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு மத்தியில் இந்த இடம் அமைந்துள்ளது.ரஷ்யாவின் கிழக்கு எல்லைக்கும் அமெரிக்காவின் மேற்கு எல்லைக்கும் இடையில் இந்த அலாஸ்கா உள்ளது. சமநிலையான ஒரு இடம் இதனால், இரு தலைவர்களுக்கும் இடையே பயண வசதியாவும் ஒரு பொதுவான இடமாகவும் அமைந்து இருக்கிறது.
இதனால் அரசியல் பாகுபடற்ற நடுநிலை இடமாக இது பார்க்கப்படுகிறது.
சமநிலையான ஒரு இடம் என்று சொல்லும் வகையில் இந்த இடம் அமைந்து இருக்கிறது. பனிபோர் காலத்தில் அமெரிக்கா – ரஷ்யா இடையே புவியியல் நெருக்கத்தை சுட்டிக்கட்டும் பகுதியாக அலாஸ்கா இருந்தது.
தற்போது அலாஸ்காவில் சமாதான பேச்சு நடப்பது உலக அரங்கில் மிக முக்கிய மொத்தத்தில் பயண எளிமை, நடுநிலைமை சூழல், பாதுகாப்பு மற்றும் சர்வதேச மையம் உள்ளிட்ட காரணிகளே அலஸ்காவை தேர்வு செய்ததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் புட்டினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
எனவே சர்வதேச கிரிமினல் நீதிமன்ற உறுப்பு நாடுகளாக இருக்க கூடிய பகுதிக்கு புட்டின் சென்றால் அவர் கைது செய்யப்படலாம். எனவே இத்தகைய சட்ட சிக்கல்களை தவிர்க்கும் வகையிலும் அலாஸ்காவை புட்டின் தெரிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
ரஷ்யாவின் நிபந்தனைகள் என்ன?
இப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் நடுநிலையான நாடாக இருக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. உக்ரேனிய ராணுவத்தை வெகுவாக குறைத்து அதன் நேட்டோ கனவுகளை கைவிட வேண்டும். ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி உள்ளது.
ரஷ்யா கட்டுப்படுத்தி வரும் நான்கு பிராந்தியங்களிலிருந்து உக்ரைன் தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளது.
ரஷ்யாவின் நிமந்தனைகள் எப்படி இருப்புனும், அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
ஐரோப்பிய தலைவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். புட்டுனும் அமைதியை விரும்புகிறார் என நம்புகிறேன், ஜெலென்ஸ்கியும் அமைதியைக் காண விரும்புகிறார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முன்வைக்கும் தீர்வு என்ன?
அமெரிக்கா முன்மொழியும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஐரோப்பிய
தலைவர்களைச் சம்மதிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தலைவர்களைச் சம்மதிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.ரஷ்யா மேற்கு உக்ரேனில் உள்ள தொன்பாஸ் பிராந்தியம் மற்றும் க்ரைமியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். அதற்குப் பதிலாக ரஷ்ய ராணுவம் பகுதியளவு கட்டுப்படுத்தி வரும் கெர்சன் மற்றும் ஜபோரிஷியா பிராந்தியங்களை ரஷ்யா விட்டுக்கொடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவிக்கிறது.
ரஷ்ய அதிபர் புட்டின் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃபை மாஸ்கோவில் சந்தித்த போது, இதே போன்றதொரு ஒப்பந்தத்தைத் தான் புட்டுனும் முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.
அமைதிக்கான நிபந்தனைகளில் புட்டினும், ஜெலென்ஸ்கியும் பார தூரத்தில் இருக்கின்ற நிலையில் உக்ரேனும் ஐரோப்பிய கூட்டாளிகளும் இத்தகைய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்வார்களா என்பது தெளிவாக இல்லை. தனது பிரதேசங்களை விட்டுக்கொடுக்கும் முடிவை ஜெலென்ஸ்கி முன்னர் பலமுறை நிராகரித்துள்ளார்.
உக்ரேனின் நிலைப்பாடு:
உக்ரேனின் பிராந்திய பிரச்னைக்கான தீர்வு அதன் அரசியலமைப்பில் உள்ளது. இதிலிருந்து யாரும் விலகிச் செல்ல மாட்டார்கள், செல்லவும் முடியாது. உக்ரேனியர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பாளருக்கு தங்களுடைய நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்காள் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு எதிரான, உக்ரேனை உள்ளடக்காத எந்தத் தீர்வும் அமைதிக்கு எதிரான தீர்வுகளே எனத் தெரிவித்த ஜெலென்ஸ்கி, அமைதியைக் கொண்டு வரும் உண்மையான தீர்வுகளுக்குத் தனது நாடு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்
டிரம்ப் மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து உண்மையான, மிக முக்கியமாக நிலைத்த அமைதிக்காக வேலை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இந்த அமைதி ரஷ்யாவின் விருப்பங்களுக்கு ஏற்ப கலைந்து விடக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது என ஜெலன்ஸ்கி் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு மேற்குலக ஆதரவு:
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் போர் தொடுத்தது. தற்போதுபோர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆயுத உதவி மற்றும் நிதி உதவி அளிப்பதால், ரஷ்யாவுக்கு உக்ரைன் கடும் சவால் அளித்து வருகிறது. இதனால், ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர எடுத்த முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு மணி நேரத்தில் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவேன் எனப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பத்து ஆண்டின் பின் அமெரிக்காவில் புட்டின்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் போரை நிறுத்த முடியவில்லை. இதனால், புட்டினை கடுமையாக தாக்கி விமர்சித்து வருகிறார். அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வர ரஷ்யாவுக்கு டிரம்ப் கெடு விதித்திருந்த நிலையில் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்யாவுக்கு சென்று அதிபர் புட்டினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதையடுத்து, டிரம்ப் – புட்டின் அடுத்த வாரம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், எனக்கும், புட்டினுக்கும் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு வருகிற 15- ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான ஒரு இறுதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப் – புட்டின் சந்திப்பை ரஷ்யாவும் உறுதிப்படுத்தியது. கடந்த மாதம் துருக்கியில் ரஷியா – உக்ரைன் இடையே நடந்த நேரடி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இந்த டிரம்ப் – புட்டின் இடையேயான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து உள்ளது.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இந்த விஷயத்தில் ரஷ்யா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி விளாடிமிர் புட்டின் பத்து ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 2015 செப்டம்பர் மாதம் ஐநா பொது தேர்தல் சமயத்தில் நியூயார்க் சென்றார். அப்போது அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா செயல்பட்டார். அதன்பிறகு புட்டின் அமெரிக்கா செல்லவில்லை. இப்போது தான் முதல் முதலாக அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவிற்கு டிரம்பை சந்திக்க செல்கிறார். இதனால் டிரம்ப் – புட்டின் சந்திப்பு சர்வதேச அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

![]()