பலதும் பத்தும்

சார்ஜாயாவில் பிரபலமாகும் மணல் குளியல்

அரேபிய நாடான சார்ஜா கடற்கரையில் சூரிய உதயத்திற்கு முன், விடியற்காலை நேரத்தில் பலர் மணல் குளியல் செய்கின்றமை பிரபலமாகியுள்ளது. முதலில் ஆழமற்ற குழிகள் கடற்கரை மணலில் தோண்டப்படுகிறது.

பிறகு நண்பர்கள் உதவியுடன் அந்த குழியில் படுத்து பிறகு மணலால் உடல் கழுத்து வரை மூடப்படுகிறது. அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஈரமான மணலில் சுமார் 25 நிமிடங்கள் புதைந்திருக்கின்றனர்.

சருமத்திற்கான நன்மைகள்

ரத்த சுழற்சி மேம்படுவது, தசைபிடிப்பில் இருந்து நிவாரணம், சருமத்திற்கான நன்மைகள் இதில் கிடைப்பது உண்மை என்றாலும் அமீரகத்தில் நிலவும் உச்சகட்டமான கோடை காலத்தில் அதிகமான வெப்பம் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்.

உடலில் நீரிழப்பு மற்றும் வெப்ப வாதம் போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மணல் குளியலுக்கான நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்.

மேலும் இதில் பங்கேற்பவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். புதைந்திருக்கும் மணல் சுத்தமாக இருக்க வேண்டும். மாசுபாடுடைய மணல் பகுதிகள் பாக்டீரியா மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மையை கொண்டு இருக்கலாம்.

எனவே குழந்தைகள், முதியவர்கள் இதில் மிக கவனமாக பங்கேற்க வேண்டும். நாள்பட்ட சுவாசக்கோளாறு மற்றும் தோல் நோய் பிரச்சினை உடையவர்கள் ஒரு மருத்துவ நிபுணரை முன்கூட்டியே சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது என கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button