உலகம்

சுதந்திர உலகின் புதிய தலைவர்… கனடா பிரதமரை பாராட்டும் பிரபலம்

ஒரு காலத்தில், மாநாடுகளில், மற்ற தலைவர்களோடு கூட்டத்தில் ஒருவராக நின்றுகொண்டிருந்த கனடா பிரதமர் இன்று ஒரு நாயகனாக, நட்சத்திரமாக ஜொலிக்கிறார் என வெளிநாட்டு ஊடகங்கள் புகழ்கின்றன.

2025ஆம் ஆண்டு மார்க் கார்னி கனடாவில் பிரதமரான தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ட்ரம்ப் அளவுக்கோ, அல்லது ஜஸ்டின் ட்ரூடோ அளவுக்கோ, அந்த விடயம் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.

ஆனால், இன்று, கனடா பிரதமர் இன்று ஒரு நாயகனாக, நட்சத்திரமாக ஜொலிக்கிறார் என வெளிநாட்டு ஊடகங்கள் புகழ்கின்றன.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில் க்ளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன், கனடா பிரதமரான மார்க் கார்னி சுதந்திர உலகின் புதிய தலைவராக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

உண்மையில் அவர் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பைத் தாக்குவதற்காக இப்படி கூறினாலும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, ஒரு காலத்தில், மாநாடுகளில், மற்ற தலைவர்களோடு கூட்டத்தில் ஒருவராக நின்றுகொண்டிருந்த கனடா பிரதமர், இன்று ஒரு நாயகனாக, நட்சத்திரமாக ஜொலிக்கிறார் என மார்க் கார்னியை புகழ்ந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் காரணம் ட்ரம்ப்தான் என்று கூட சொல்லலாம்!

ஏனென்றால், சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் என்னும் பழமொழியைப் போல, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாக கூறி எரிச்சலூட்டிக்கொண்டே இருந்தார் ட்ரம்ப்.

சுதந்திர உலகின் புதிய தலைவர்... கனடா பிரதமரை பாராட்டும் பிரபலம் | Mark Carney Praised By Hilary Clinton

அத்துடன், ட்ரம்பின் கூடுதல் வரிகள் என்னும் ஆயுதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று.

ஆக, ட்ரம்பின் தொல்லை தாங்காமல், வேறு நாடுகள் பக்கம் கவனத்தைத் திருப்பத் துவங்கினார் கார்னி.

அவ்வகையில், ஐரோப்பிய ஒன்றியம், ஆசியா என பல நாடுகளுக்கு பயணம் செய்து, பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துவருகிறார் கார்னி.

சமீபத்தில் கம்போடியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்ற கார்னி, சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கிறார். விரைவில் மெக்சிகோ ஜனாதிபதியான கிளாடியா ஷெய்ன்பாமையும் சந்திக்க இருக்கிறார்.

அடுத்ததாக, பிரதமர் கார்னி அடுத்தடுத்து முக்கிய மாநாடுகளில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு மாற்றாக மற்ற சில நாடுகள் இணையவேண்டும் என தான் அந்த மாநாடுகளில் அழைப்பு விடுக்க இருப்பதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற முக்கிய விடயங்களை விநியோகிக்கும் நாடான அமெரிக்கா, எப்போது என்ன முடிவெடுக்கும் என்பதையே யூகிக்க முடியாத நிலையில், கனடாவை அமெரிக்காவுக்கு மாற்றாக முன்னிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார் கார்னி!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *