பலதும் பத்தும்

சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி நகரும் மத நல்லிணக்க பாதயாத்திரை..!

மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை இன்று காலை 9:00 மணியளவில் தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினரின் நிலையான சமாதானத்திற்க்காக மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆலயத்தில் விசேட பூசை வழுபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமான பாதயாத்திரை சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு சென்று அங்கு விசேட வழிபாடுகள், சந்நிதியான் ஆச்சிரம உபசரணைகள், உதவிகளுடன்  கருத்துரைகள் என்பன இடம் பெற்றதை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.

குறித்த பாதயாத்திரையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து இளைஞர்கள் இணைந்துள்ளனர்.  அதேபோன்று  பாதையாத்திரையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்து இளைஞர்கள் இணைந்து செல்லவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர்கள் சேவைகள் மன்ற பணிப்பாளர்  வினோதினி சிறிமோகன் தலைமையில் ஆரம்பமான  பாதயாத்திரையை  வடக்கு மாகாண இளைஞர்கள் சேவை மன்ற பணிப்பாளர் ஜெமினி சந்திரசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வழியனுப்பி வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *