பலதும் பத்தும்

ரூ.3 கோடிக்கு ஏலம் போன பறவை

அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில், அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட ‘கார்மூஷா பியூர் அல்ட்ரா வொயிட்’ ரக வெள்ளை பால்கன் பறவை ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு விறுவிறுப்பான ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில், கடந்த 28ஆம் திகதி முதல் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் அமீரக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் வேட்டை மற்றும் குதிரையேற்றம் தொடர்பான சாதனங்கள் மற்றும் தயாரிப்புகள் பல்வேறு நிறுவனங்களால் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், பல்வேறு விலங்குகளும் பறவைகளும் ஏலத்தில் விடப்படுகின்றன. நடப்பு ஆண்டில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான 55 முன்னணி பால்கன் பறவை பண்ணைகள் இதில் பங்கேற்றுள்ளன.

நடப்பு ஆண்டின் கண்காட்சி ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்பனையான பெருமையை இந்த அரிய பறவை பெற்றுள்ளது. தூய்மையான வெள்ளை நிறம், 1 கிலோ எடை மற்றும் 16.5 அங்குலம் நீளம் கொண்ட இந்தக் கம்பீரமான பறவை, அதன் அழகிய தோற்றத்தினால் உலக முழுவதிலும் இருந்து வந்திருந்த பறவை ஆர்வலர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *