முச்சந்தி
நெருப்போடு விளையாடும் புட்டின்?… தோல்வில் போர் நிறுத்தம் – டிரம்ப் எச்சரிக்கை… ஐங்கரன் விக்கினேஸ்வரா

என அரசியல் வல்லுநர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான அண்மைய தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபத்தில் கூறிய கருத்துக்கு, பதிலடி செய்துள்ள ரஷ்யாவின் ராணுவ தளபதிகள் நிலையால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது.
கடந்த காலங்களில் ‘என்னுடைய நண்பர் புட்டினுடன் தான் நான் பேசுகிறேன்’, ‘போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு நான் உதவுகிறேன்’, ‘நான் இல்லாமல் புட்டின் எப்படி அமைதிக்கு வருவார்?’ என்று ரஷ்ய அதிபர் புட்டினை விட்டுக் கொடுக்காமல் பேசி வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ஆயினும் ரஷ்யா எப்போதெல்லாம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறதோ, அதற்கு கண்டனம் தெரிவிக்கவும் டிரம்ப் தயங்கவில்லை. தற்போது ரஷ்யா உக்ரைனின் வட கிழக்கு பகுதியில் உள்ள நான்கு நகரங்களை கைப்பற்றி உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப், “நான் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு எதிராக பாரிய பாதிப்புக்கள் நிறைய நடந்திருக்கும் என்பதை புட்டின் உணரவில்லை. புட்டின் நெருப்போடு விளையாடுகிறார்” என்று கோபமாகப் டிரம்ப் பேசியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி டிமிட்ரி மெட்வெடேவ், “நெருப்போடு புட்டின் விளையாடுகிறார் மற்றும் மிகவும் மோசமான விஷயம் என்று ரஷ்யாவைக் குறித்த டிரம்ப் உடைய வார்த்தைகளை பொறுத்தவரை, எனக்கு தெரிந்த ஒரே மிகவும் மோசமான விடயம் – மூன்றாம் உலகப் போர். இது டிரம்பிற்கு புரியும் என்று நினைக்கிறேன்” என்று அவரும் மிக காட்டமாக பதிலுக்கு கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் டிரம்பின் சமூக வலைதளப் பதிவுகளுக்கு ரஷ்யா இதுவரை பெரிதாக எதிர்ப்பு செய்வதில்லை. ஆனால், தற்போது ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி மூன்றாம் உலகப் போர் குறித்து பதிவிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டிரம்ப் – புட்டின் பேச்சுவார்த்தை :
ரஷ்யா, உக்ரைன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று வணிகத்தை முன்னிறுத்தி டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். மே மாத நடுப்பகுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புட்டின் இடையே நடந்த இரண்டு மணிநேர தொலைபேசி உரையாடலில் வணிகத்தை முன்னிறுத்தி, போரை நிறுத்த டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில், மே நடுப்பகுதியில் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புட்டின் இடையே தொலைப்பேசியில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. பின்னர் ரஷ்யா – உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஓரளவு சமாதான அறிகுறி தெரியவந்தது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான தொலைபேசி பேச்சுவார்த்தையில்
ரஷ்யா, உக்ரைன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் முக்கியமாக போரை முடிப்பதைக் குறித்து முடிவு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதற்கான நிபந்தனைகளை அவர்களே பேசி முடிவு செய்வார்கள். காரணம், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் நடந்த மற்றவர்களுக்குத் தெரியாத விஷயங்கள் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
ரஷ்யாவிற்கு அமெரிக்கா உடன் பெரியளவில் வணிகம் செய்ய வேண்டும். இந்தப் போர் முடிந்த பிறகு, அதற்கு நான் ஒப்புக்கொள்வேன். இதன் மூலம், ரஷ்யா வேலை வாய்ப்புகள் மற்றும் செல்வத்தை பெருக்க பெருமளவில் வாய்ப்புகள் உண்டு என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
அதேபோல, உக்ரைன் தனது நாட்டை மீண்டும் கட்டமைக்க வர்த்தகம் பெருமளவில் உதவும். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே உடனடியாக பேச்சுவார்த்தைத் தொடங்கும் என டிரம்ப் நம்பிக்கையை தெரிவித்தார்.
புட்டினுடனான உரையாடலுக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி,
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மனி அதிபர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருடனும் டிரம்ப் கலந்துரையாடினார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மனி அதிபர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருடனும் டிரம்ப் கலந்துரையாடினார்.அமெரிக்காவால் புட்டினுக்கே இலாபம்:
இதேவேளை பேச்சு வார்த்தையில் அமெரிக்கா இல்லாவிட்டால் புட்டினுக்கு தான் அதிக இலாபம் ஏற்படும் என உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை ஒன்றையும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடல் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பேச்சை ரஷ்யா கண்டித்துள்ளது.
ஜெலன்ஸ்கி இருமுறை அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசியுள்ளார். முதலில் டிரம்ப் – ரஷ்யாவின் தலைவர் உரையாடலுக்கு முன்பாகவும், பின்னர் ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் கலந்து உரையாடி உள்ளார். இது ஒரு முக்கியமான தருணம். உலகத்தால் இப்போது அதன் தலைவர்களால் உண்மையிலேயே போர் நிறுத்தம் மற்றும் நீடித்த அமைதியை கொண்டுவர முடியுமா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்கா – உக்ரைனுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், டிரம்பிடம், உக்ரைன் முழு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு தயார் என்பதை உறுதிப்படுத்தியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யா போரை நிறுத்த தயாராக இல்லையென்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ரஷ்யா மீது கொடுக்கப்படும் அழுத்தத்தின் மூலம் தான் உண்மையான அமைதி கிட்டும்.
தீர்க்கமான முடிவை கொண்டுவர ரஷ்யா உடன் உக்ரைன் எந்த விதத்தில் வேண்டுமானாலும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பலமுறை கூறிவிட்டேன். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு துருக்கி, வத்திக்கான் அல்லது சுவிட்சர்லாந்து தகுந்த இடமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைனையும், எங்களது பிரதிநிதிகளையும் சமாதானப்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம். எங்களுக்கு ரஷ்யா போரை நிறுத்த தயாரா என்பது தான் தெரிய வேண்டும்.ரஷ்யா போரை நிறுத்த சம்மதிக்காவிட்டால், போர் கைதிகளையும், அகதிகளையும் விடுவிக்காவிட்டால், புட்டின் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்தால், ரஷ்யாவிற்கு போரை நிறுத்த விருப்பம் இல்லை என்றே அர்த்தப்படும். அதனால் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, உலகம் ரஷ்யா மீது மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ரஷ்யா ஆரம்பித்தப் போரை நிறுத்த வேண்டும். அதை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். உக்ரைன் எப்போதுமே அமைதிக்கு தயாராகவே உள்ளது உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
![]()