வர்த்தமானி அறிவிப்பை மீளப் பெறுவதற்காகச் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி கூறும் சிறீதரன்

வடக்கு காணி அபகரிப்புத் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீளப் பெறுவதற்காகச் செயற்பட்ட அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கில் காணி அபகரிப்பிற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி விடயம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமரால் ஒரு கூட்டம் பாராளுமன்றத்தில் ஏற்பாடுசெய்திருந்த போது வடக்கு கிழக்கின் அனைத்து தமிழ்த்தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த வர்த்தமானி மீளப் பெறப்பட வேண்டும் என்று ஒருமித்துக் குரல் கொடுத்திருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று (நேற்று) குறித்த வர்த்தமானி மீளப்பெறப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட அரசாங்க உயர்மட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. வர்த்தமானி மீளப் பெறப்பட்டு மக்களின் கோரிக்கை வெற்றியடைய தீர்க்கத்தோடு செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()