முச்சந்தி

ஐ.ம.ச.வுக்குள் கறுப்பு ஆடுகளா?; கட்சித் தலைமையின் கடும் எச்சரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட இரகசிய வாக்கெடுப்பு தேவைப்பட்டால், கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகச் செல்லும் அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவியையும் இரத்துச் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் உள் விவாதங்களின் போது, உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவும்போது கட்சியின் முடிவுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாத அனைத்து உறுப்பினர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும் கடந்த பாராளுமன்றத்தில் கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயல்பட்ட பல உறுப்பினர்களின் பதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதை உறுதிப்படுத்தும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல உள்ளூராட்சி மன்றங்களில் ஆளுங்கட்சி ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் பலர் கட்சி மாறி ஆதரவு வழங்கும் செயற்பாடு இடம்பெறக்கூடும் என்ற நிலைப்பாட்டில், ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமல்லாது ஏனைய பல கட்சிகளும் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button