பலதும் பத்தும்

காத்திருப்புகளின் பின் வெளிவந்தது வெண்புகை!

புதிய திருத்தந்தையாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபெர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட்.

267 ஆவது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என்பதை உணர்த்தும் விதமாக சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைப்போக்கியிலிருந்து வெண்புகை வெளிவந்துள்ளது.
புதிய புதிய திருத்தந்தையாக ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
(இந்திய இலங்கை நேரம் இரவு 9.38 மணியளவில் முதல் வாக்குப்பதிவிற்கான முடிவுகளை தெரிவிக்கும் வண்ணம் சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைப்போக்கியிலிருந்து வெண்புகை வெளிவந்து, திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது.

மேலும் அடுத்த 3 நிமிடங்களில் 5 நிமிடங்களில் என தொடர்ந்து மீண்டும் வெண்புகை வெளியேறி திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது. மக்கள் அனைவரும் கரவொலி எழுப்ப, பெருங்கோவிலின் மணிகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன என வத்திக்கான் செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்குப்பதிவு தொடங்கிய முதல் நாள் முதல் இன்று வரை ஒவ்வொருமுறையும் புகை வெளிவரும் நேரத்தை எதிர்பார்த்து மக்கள் வத்திக்கான் வளாகத்தில் காத்திருந்தனர். மே 7 புதன் மாலை 45,000 பேரும் மே8 வியாழன் காலை 15,000 பேரும் மாலையில் ஆயிரக் கணக்கான மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

உலகளாவிய கத்தோலிக்க திருஅவையின் தலைவரை இந்த உலக மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக எண்ணற்ற செய்தித்தொடர்பாளர்கள் புகைப்படம் மற்றும் காணொளி வாயிலாக தங்களது நாடுகளில் கண்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வத்திக்கானில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்து ஒளிபரப்பி வந்தனர்.

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் புதிய திருத்தந்தை யார் என அறியும் ஆவலில் சிஸ்டைன் சிற்றாலயப் புகைபோக்கியைப் பார்த்த வண்ணம் காத்திருந்தனர்.
உரோம் உள்ளூர் நேரம் மாலை 6.08 க்கு வெண்புகை வெளிவர ஆரம்பித்ததும் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரங்களைத் தட்டி தங்களது மகிழ்வினை வெளிப்படுத்தினர்.

புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வெண்ணிறப் புகையை வரவேற்றனர். வத்திக்கானைச் சுற்றி அமைந்திருந்த பல்வேறு சாலைகளும் போக்குவரத்திற்கு நிறுத்தப்பட, மக்கள் பல திசைகளிலிருந்தும் பெருங்கோவில் வளாகத்தை நோக்கி ஓடிச் சென்றனர்.

புதிய பாப்பாண்டவர்,லியோ XIV என்ற பாப்பாண்டவர் பெயரை ஏற்றுக்கொண்டுள்ளார். 69 வயதான இவர், வத்திக்கானில் இருந்து தெரிவான முதல் அமெரிக்க திருத்தந்தையாக போற்றப்படுகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button