இலங்கை

மட்டு.மாநகர சபையில் ஜ.ம.ச.வுடன் இணைந்து தமிழரசு ஆட்சியா?

தமிழரசு கட்சி தொலைபேசி சின்னமான ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சி அமைப்பதற்கான இரகசிய பேச்சுவார்த்தையில் தமிழரசு கட்சி ஈடுபட்டுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபையில் 20 வட்டாரங்களில் 20 உறுப்பினர்கள் மற்றும் 14 போனஸ் ஆசனங்கள் உட்பட 34 உறுப்பினரை தெரிவு செய்வதற்கான நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சி 16 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 9 உறுப்பினர்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 3 உறுப்பினர்களையும் ஜக்கிய மக்கள் சக்தி 2 உறுப்பினர்களையும் பந்து சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக்குழு 4 உறுப்பினர்கள் உட்பட 34 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழரசு கட்சி 16 உறுப்பினர்களை பெற்று வெற்றி பெற்றாலும் மாநகர சபை ஆட்சியை அமைப்பதற்கு 18 உறுப்பினர்களுக்கு இன்னும் இரு உறுப்பினர்கள் தேவை இது தொடர்பாகக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (சங்கு) பந்து சின்னத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களை பெற்றுக் கொண்ட சுயேச்சை குழுவுடன் இணைந்து ஆட்சியமைக்காது ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியை அமைப்பற்கு இரகசியமாக தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸாவுடன் பேசி எதிர்வரும் நாட்களில் குறித்த மாநகர சபையின் ஆட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி 91,818 வாக்குகளை பெற்று 85 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 53,002 வாக்குகளை பெற்று 44 உறுப்பினர்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 39,791 வாக்குகளை பெற்று 37 உறுப்பினர்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 32,214 வாக்குகளை பெற்று 31 உறுப்பினர்களையும், ஜக்கிய மக்கள் சக்தி 20,505 வாக்குகளை பெற்று 20 உறுப்பினர்களையும், சுயேச்சைக்குழு பந்து சின்னம் 13,104 வாக்குகளை பெற்று 11 உறுப்பினர்களையும்,

ஜக்கிய தேசிய கட்சி 7,769 வாக்குகளை பெற்று 7 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கு சின்னம் 7,239 வாக்குகளை பெற்று 6 உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3.619 வாக்குகளை பெற்று 2 உறுப்பினர்களை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு சில சபைகளை தமிழரசுக் கட்சி ஆட்சியை அமைத்தாலும் ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button