பலதும் பத்தும்
கதாநாயகனாக அறிமுகமாகும் இலங்கையைச் சேர்ந்த வாகீசன்

இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் வாகீசன், மைனர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இவரின் மருதமோ எந்தன் காவியமோ, ஜினுக்கு சிங்காரி போன்ற பாடல்கள் வைரலாகி பெரும் வரவேற்றபைப் பெற்றன.
வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ள படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜனனி கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()