உலகம்

16 பாகிஸ்தானிய யூடியூப் அலைவரிசைகளுக்கு இந்தியா தடை!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் வகுப்புவாத உணர்வுபூர்வமான தகவல்களைப் பரப்பிய குற்றத்துக்காக பாகிஸ்தானின் 16 யூடியூப் அலைவரிசைகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சில நாட்களின் பின்னர் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட தளங்களில் ஜியோ நியூஸ், டான், ரஃப்தார், போல் நியூஸ், ARY நியூஸ், சமா டிவி, சுனோ நியூஸ் போன்ற முக்கிய செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும்.

மேலும், முனீப் ஃபரூக், உமர் சீமா, அஸ்மா ஷிராசி மற்றும் இர்ஷாத் பாட்டி உள்ளிட்ட பிரபல ஊடகவியலாளர்களின் யூடியூப் தலைவரிசைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இது தவிர 3.5 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ்களை (subscribers) கொண்ட பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரின் யூடியூப் அலைவரிசையும் தடை செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button