பலதும் பத்தும்

கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த ISIS

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பா.ஜ.க. எம்.பி.-யுமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் பொலிஸ் நிலையத்தில் கம்பீர் முறைப்பாடு அளித்துள்ளார்.

‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் முறைப்பாடு அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இரண்டு மின்னஞ்சல்கள் வந்ததாகவும், இரண்டிலும் “IKillU” என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கம்பீர் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் உடனடியாக வந்துள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டித்த விளையாட்டு வீரர்களில் கம்பீரும் ஒருவர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இதை செய்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button