பலதும் பத்தும்

நகங்களை பிடுங்கி, மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை

இந்தியாவில் சத்தீஸ்ரில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை பார்த்த இருவர் உரிமையாளரால் கொடூரமாக நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த அபிஷேக் பாம்பி மற்றும் வினோத் பாம்பி என்ற இருவர் ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கரின் காப்ரபட்டியில் சோட்டு குர்ஜார் என்பவரின் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி சோட்டு குர்ஜார் மற்றும் அவரது உதவியாளர் முகேஷ் சர்மா ஆகியோர், அபிஷேக் மற்றும் வினோத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி தாக்கினர்.

இருவரையும் நிர்வாணமாக்கி, நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அரைநிர்வாண நிலையில் ஒருவர் மீது மின்சாரம் பாய்ச்சப்படுவது பதிவாகியுள்ளது.

தாக்குதலிலிருந்து இருவரும் ராஜஸ்தானில் தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று, அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர்.

பாதிக்கப்பட்ட வினோத் கூறுகையில், “எனது வாகனத்திற்கான EMI கட்ட ரூ .20,000 சம்பள முன்பணம் கேட்டேன். அதை அவர் மறுத்ததால், நான் வேலையை விட்டு நிற்கிறேன் என்றதும், அவர் என்னை தாக்கத் தொடங்கினார்.என்னுடன் சேர்த்து வினோத்தையும் தாக்கினர்” என கூறினார்.

இந்த சம்பவம்தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button