உலகம்
டெல்லியில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

இந்திய தலைநகர் டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் இன்று அதிகாலை நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்பு வீரர்கள் மற்றும் டெல்லி பொலிஸ் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
![]()